2022-ன் சிறந்த நடிகர், நடிகைக்கான ஆஸ்கார் விருது யாருக்கு?

2022-ன் சிறந்த நடிகர், நடிகைக்கான ஆஸ்கார் விருது யாருக்கு? - Daily news

உலகமே வியக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. அதன்படி, 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான முறையில் நடைபெற்று வருகிறது.  ஆஸ்கர் விருது விழா கடந்த நான்கு வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் , ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை ஆகும் . 

இந்நிலையில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தட்டி சென்றுள்ளார். மேலும் கிங் ரிச்சர்ட் திரைப்படத்திற்காக வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை டிரைவ் மை கார் திரைப்படம் வென்றுள்ளது.  ஜப்பான் நாட்டு திரைப்படமான இந்த படத்தை யூசுக் ஹமாகுச்சி இயக்கி உள்ளார்.

அதனைத்தொடர்ந்து சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை ஜெசிகா சேஸ்டெய்ன் தட்டிச் சென்றுள்ளார். தி அய்ஸ் ஆப் டேமி ஃபாய் திரைப்படத்திற்காக ஜெசிகா சேஸ்டெய்னுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து என்னென்ன விருதுகள் யாருக்கு வழங்கப்பட்டது என்பவை பின்வருமாறு: சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை 'பெல்ஃபாஸ்ட்' படத்திற்காக 'கென்னித் பிரனாக்' வென்றுள்ளார். சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை ’தி பவர் ஆப் தி டாக்’ திரைப்படத்திற்காக ’ஜேன் கேம்பியன்’ வென்றார்.  சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'ஷியான் ஹெட்டர்' இயக்கிய 'கோடா' திரைப்படம் வென்றுள்ளது.  லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை 'தி லாங் குட்பை' வென்றுள்ளது.  சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை 'க்ரூல்லா' திரைப்படத்திற்காக ’ஜென்னி பெவன்’ வென்றார்.

ஆஸ்கார் விருது நிகழிச்சியின் தொகுப்பாளர் ஒருவர் நிகழ்ச்சி மேடையில்  நடிகர் வில்ஸ்மித்தின் மனைவியை கிண்டல் செய்தற்காக தொகுப்பாளரை கோவத்தில் அறைந்தார் மேலும் என் மனைவியை பற்றி கிண்டல் செய்யாதே என்றும் எச்சரித்தார். அதன் பின்பு ஆஸ்கார் விருது வாங்கியவுடன் பேசிய அவர் நான்  தொகுப்பாளரை அறைந்தற்காக எல்லோர் முன்னிலையும் மன்னிப்பு கேக்கிறேன் என்றும் love will make you do crazy things என்றும் கண்ணீர் மல்க குறிப்பிட்டார். 
 

Leave a Comment