டுவிட்டரை வைத்து மஸ்க் என்ன செய்யப் போகிறார் என தெரியவில்லை என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் அதிரடியாக டுவிட்டர் நிறுவனத்தையே விலைக்கு வாங்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கு எலான் மஸ்க்குடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கிட்டதட்ட இந்த பேச்சுவாரத்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக கூறப்பட்டு வந்த நிலையில் திடீர்ரென்று எலன் மஸ்க் ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார். மேலும் Twitter CEO என்ற ஹேஷ்டாக் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதனைத்தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் இந்திய மதிப்பில் ரூ. 4,200 ஆயிரம் கோடிக்கு அமெரிக்க மதிப்பில் 44 பில்லியன் டாலருக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், எப்போது அதிகாரபூர்வமாக தொகை பரிமாற்றம் நடக்கும், எலான் மஸ்க் வாங்கிய பிறகு டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் தற்போது வெளியாகவில்லை.ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய விரும்புவதாக டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கூறியுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை இந்தியரான பராக் அகர்வால் தற்போது வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க்கிற்கு ட்விட்டர் நிறுவனம் விற்கப்பட்டுள்ளதையடுத்து இணையத்தில் எலான் மஸ்க் பழைய ட்வீட் ஒன்று வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த தகவலை பங்குச்சந்தையில் அளித்த பைலிங்கின்போது, எலான் மஸ்க் தெரிவித்துள்ளது வெளியாகியுள்ளது. அதாவது டெஸ்லா நிறுவனத்தில் 17% பங்குகளை எலான் மஸ்க் வைத்துள்ளார், அதில் 2.6% பங்குகளை தற்போது திடீரென விற்பனை செய்துள்ளார். ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியின்படி, ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக 4400 கோடி டாலர் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதற்கான பணத் தேவைக்காக எலான் மஸ்க் டெஸ்லா பங்குகளை விற்றிருக்கலாம்.
எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 26800 கோடி டாலராகும். இதில் 2100 கோடியை பங்குகளாக் கொடுக்க வேண்டும். மீதமுள்ள 17% எவ்வாறு வழங்கப்போகிறார் என்பது தெரியவில்லை. பங்குச்சந்தையில் பட்டியலிடாத ராக்கெட் நிறுவனமான ஸ்பேக்ஸ்எக்ஸ்ஸில் 43.61 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வைத்திருக்கிறார். இந்த நிறுவநத்தின் மதிப்பு 10000கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. மிகப்பெரிய தொகையை முதலீடு செய்யும் அளவுக்கு எலான் மஸ்கிற்கு புதிதாக பார்ட்னர் கிடைப்பது சந்தேகம் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 1640 கோடி டாலர் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளில் முதன்முதலில் இப்போதுதான் எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார். இந்த விற்பனை குறித்து எலான் மஸ்க் ட்விட்டரில்பதிவிட்ட செய்தியில் இனிமேல் டெஸ்லா பங்குகளை விற்கும திட்டம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்பாக 9% பங்குகளை எலான் மஸ்க் வாங்கியது தொடர்பாக, பெடரல் வர்த்தக ஆணையம் மஸ்க்கிடம் விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து பங்குகளை பிரித்து வழங்குவதில் சிரமங்களைப் போக்க ஏதாவது கூட்டாளியை எலான் மஸ்க் தேடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மிகப்பெரிய தொகையை முதலீடு செய்யும் அளவுக்கு எலான் மஸ்கிற்கு புதிதாக பார்ட்னர் கிடைப்பது சந்தேகம் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க்-யிடம் சென்று இருப்பது குறித்தும் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் உலக கோடீஸ்வரர்களின் ஒருவருமான பில் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பில் கேட்ஸ் கூறுகையில், " எலான் மஸ்க் உண்மையில் டுவிட்டரை இன்னும் மோசமாக்க முடியும். ஆனால் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.
அதனைத்தொடர்ந்து அதே நேரத்தில் அவரது மற்ற நிறுவனங்களில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் சாதனை அற்புதமாக உள்ளது. அந்த நிறுவனங்களில் சிறந்த பொறியாளர்கள் குழுவை ஒன்றிணைத்து உள்ளத்தில் மஸ்க் சிறப்பாக செயல்ப்பட்டுள்ளார் என்று நான் நம்புகிறேன். ஆனால் டுவிட்டர் நிறுவனத்திலும் அவரால் அதை செய்ய முடியுமா என்று எனக்கு சந்தேகம் உள்ளது, ஆனால் அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது" என்று பில் கேட்ஸ் தெரிவித்தார்.