“வெயில் காலத்தை தமிழக மக்கள் எப்படி கையாள வேண்டும் தெரியுமா?” அமைச்சர் மா. சுப்பிரமணியன் தரும் டிப்ஸ்..

“வெயில் காலத்தை தமிழக மக்கள் எப்படி கையாள வேண்டும் தெரியுமா?” அமைச்சர் மா. சுப்பிரமணியன் தரும் டிப்ஸ்.. - Daily news

“வெயில் காலத்தை தமிழக மக்கள் எப்படி கையாள வேண்டும்?” என்று, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சில ஆலோசனைகளை முன்வைத்து உள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் வெளியில் வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. வெயிலின் தாக்கம், பகல் பொழுதில் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு வீட்டில் இரவு நேரத்திலும், அதன் உக்கிரம் உணரப்படுவதாக பொது மக்கள் கவலைத் தெரிவித்து உள்ளனர்.

முக்கியமாக, தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிய முதலே அதிக அளவிலான வெப்பம் கணப்பட்ட நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே மிக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. 

அந்த வகையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி, அதன் தாக்கம் கடுமையாகி வருகிறது.

அத்துடன், பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வாட்டி வதைத்து வருவது பதிவாகி வந்தது. இவற்றுடன், தற்போது அக்னி நட்சத்திர காலமும் தொடங்கி உள்ளதால், இனி வரும் காலங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என்றும், கூறப்படுகிறது.

அந்த வகயைில், அக்னி நட்சத்திரம் தொடங்கி இருக்கும் இன்று முதல், முதல் 7 நாட்களில் மெதுவாகவே வெப்பத்தின் தாக்கம் ஏறுமுகமாக இருக்கும் என்றும், அதன் படி, அடுத்த வரும் 7 நாட்களுக்கு அதிக அளவிலான வெப்பம் பதிவாகும் என்றும், இப்படி கடைசி 7 நாட்களில் படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் அப்படியே குறையும்” என்றும், வானிலை மையம் கூறியிருந்தது. 

இந்த நிலையில் தான், “வெயில் காலத்தில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மது அருந்துவதை குறைத்துக்கொள்ளுங்கள்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஆலோசனை வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக, இன்றைய தினம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், 

- “கோடை காலம் முடியும் வரை, மக்கள் அனைவரும் தண்ணீர் பாட்டிலை வெளியே எடுத்து செல்வது நல்லது” என்று, ஆலோசனை கூறி உள்ளார்.

-  “தாகம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கோடை காலத்தில் போதிய அளவு நீர் குடிக்க வேண்டும்” என்றும், அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஆலோசனை வழங்கி உள்ளார்.

- அத்துடன், “அவசியம் இல்லாமல், பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” என்றும், அமைச்சர் மா. சுப்பிரமணியன், கேட்டுக்கொண்டு உள்ளார். 

- “வெயிலில் பயணிக்கும் போது தலையில் துண்டு, தொப்பி, துணி உள்ளிட்டவற்றை அணிந்துகொண்டு தலையை மறைத்து செல்வது என்பது நல்லது” என்றும், அவர் ஆலோசனைகளை முன்வைத்து உள்ளார். 

- “கால்களில் செருப்பு இல்லாமல் செல்வதை பலரும் தவிர்க்க வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டு உள்ளார். 

- “காற்றோட்ட வீடுகளில் தங்கியிருப்பது மிக அவசியம்” என்றும், அமைச்சர் மா. சுப்பிரமணியன், வலியுறுத்தி உள்ளார்.
 
- மேலும், “கோடை காலத்தில் வெளியே செல்லும் போது, முடிந்தவரை அனைவரும் எலுமிச்சை உள்ளிட்ட பல சாறுகளை பகிர வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

- இவற்றுடன், “தேநீர், காப்பி போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும், பாட்டில்களில் அடைத்து வைத்துள்ள குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்” என்றும், அமைச்சர் மா. சுப்பிரமணியன், வலியுறுத்தி கேட்டுக்கொண்டு உள்ளார்.

- “வெயில் காலத்தில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மது அருந்துவதை முற்றிலுமாக குறைத்துக்கொள்ளுங்கள்” என்றும், அவர் ஆலோசனை வழங்கி உள்ளார். 

- “புரத சத்து அதிக உள்ள உணவுகளை தவிர்த்து, பழைய உணவுகளை உட்கொள்ள கூடாது” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

- “வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது குழந்தைகளை ஏற்ற கூடாது” என்றும், அவர் கேட்டுக்கொண்டு உள்ளார். 

- “கோடை வெப்பத்தில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது என்றும், யாருக்கேனும் எதாவது உடல் பாதிப்பு என்றால், அவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்” என்றும், அமைச்சர் மா. சுப்பிரமணியன், சில ஆலோசனைகளை முன்வைத்து உள்ளார்.

Leave a Comment