மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்த பாம்பு பிடிக்கும் தொழிலாளியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார் பெண் டெய்லர்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் பகுதியில் தண்ணீர் தொட்டி வீதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். வினோத் குமாரின் மனைவி லட்சுமி. இவர் தையல் தொழிலாளர் வீட்டிலேயே தையல் மிஷின் வைத்து துணி தைத்து கொடுத்து தொழில் செய்து வருகிறார்.
வினோத்குமார், லட்சுமி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவி லட்சுமியின் நடத்தையில் அடிக்கடி சந்தேகம் கொண்டு வினோத்குமார் அவரிடம் அடிக்கடி தகராறும் செய்து வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து நேற்று இரவும் அப்படித்தான் மகாலட்சுமி மீது சந்தேகம் கொண்டு வினோத்குமார் வாக்குவாதம் செய்ய இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி போனது.
அதனைத்தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் தையல் மெஷின் அருகிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து கணவன் வினோத்குமாரை சரமாரியாக குத்தி இருக்கிறார் மனைவி லட்சுமி. வழியில் துடித்த வினோத் குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துயிருக்கிறார்கள்.
மேலும் அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த வினோத்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்து உள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வினோத்குமார் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தகவல் அறிந்து வந்த வடக்கிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர், மேலும் எதற்காக கொலை செய்தார் வேறு காரணங்கள் உள்ளதா என போலீசார் தீவிர விசாரைணயில் ஈடுபட்டுள்ளனர்.