“உலக புகழ் பெற்ற தாஜ்மஹாலில் மூடப்பட்ட 22 அறைகளில், இந்து மதத்தின் சாமி சிலைகள் உள்ளதாக” தொடுக்கப்பட்ட வழக்கில், இன்று விசாரணை தொடங்குகிறது.
இந்தியாவில் அமைந்துள்ள தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது.
அதாவது, “காதலின் நினைவு சின்னமாக உலகப் புகழ் பெற்றுத் திகழும் தாஜ்மஹால், இந்தியாவில் இருப்பது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமையாகவே இருக்கிறது. ஆனால், அப்படி உன்னதமான அன்பின் அந்த காதலின் நினைவு சின்னமாக அமைதியாக இருக்கும் இந்த தாஜ்மஹாலைச் சுற்றி இந்தியாவில் தொடர்ந்து அரசியல் பேச்சுக்கள் மற்றும் சர்ச்சைகள் வெடித்த வண்ணமே உள்ளன. இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் வெடித்த தாஜ்மஹால் பற்றிய சர்ச்சையானது, சற்று ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சையாக கிளப்பப்பட்டு இருக்கிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உலக புகழ்பெற்ற அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் நினைவுச் சின்னம் அமைந்திருக்கிறது. இந்த அன்பின் நினைவுச் சின்னமானது, முகலாய அரசர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஷாஜகானால் கட்டி எழுப்பப்பட்டது என்பது வரலாறு.
இப்படியாக, இந்தியாவின் ஆக்ராவில் இருக்கும் இந்த அன்பின் சின்னம் தாஜ்மஹாலைக் காண, உலகம் முடிவதில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வந்து செல்வது ஒரு பக்கம் பெருமை என்றாலும், இன்னொரு பக்கம் வெளிநாட்டினரின் வருகையிால், இந்தியாவிற்கு வருவாய் அதிகரிப்பும் இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.
இந்த நிலையில் தான், தாஜ்மஹால் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்து உள்ளார் ராஜஸ்தான் மாநில எம்.பியும், ஜெய்ப்பூர் அரச குடும்ப உறுப்பினருமான தியா குமாரி.
இது தொடர்பாக பேசி உள்ள தியா குமாரி, “தாஜ்மகால் வளாகத்தில் உள்ள 22 அறைகளில் இந்து கடவுள்களின் சிலை இருக்க வாய்ப்புள்ளதாகவும், எனவே அந்த அறைகளை திறந்து சோதனை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்றும், தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
அத்துடன், இது தொடர்பாக, “இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரி” பாஜக சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டன.
அத்துடன், “தாஜ்மகால் வளாகத்தில் உள்ள 22 அறைகள் பூட்டிக் கிடைக்க என்ன காரணம்?” என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்?” என்றும், பாஜக சார்பில் வலியுறுத்திப்பட்டது.
குறிப்பாக, “தாஜ்மகால், ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது என்பதற்கான ஆவணம் தங்களிடம் இருப்பதாகவும்” பாஜக எம்.பி.தியா குமாரி, பேசியிருந்தார்.
முன்னதாக, “தாஜ்மஹாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளைத் திறந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை” அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அயோத்தியின் பாஜக செய்தித் தொடர்பாளரான டாக்டர்.ரஜ்னீஷ் என்பவர் தொடுத்த மனு, கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
அதாவது, “இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் அமைந்து உள்ள தாஜ்மஹால் கட்டப்படுவதற்காக, அங்கிருந்த தேஜாலாயா எனும் சிவன் கோயில், இடிக்கப்பட்டதாகப் புகார் உள்ளது என்றும், இந்த கோயிலின் சிலைகள், தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் இருப்பதாகவும்” சந்தேகம் எழுப்பப்பட்டது.
இதனையடுத்து, “தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன், அப்பகுதியில் கோயில் இருந்ததாகக் கூறி” தற்போது மீண்டும் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்து உள்ளது. தற்போது இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.