தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியை குறிப்பிட்டுள்ளார்.
சித்திரை மாதம் முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். "பிலவ" ஆண்டு விடைபெற்று " சுப கிருது " புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ் புத்தாண்டு, சித்திரை திருநாளான இன்று தமிழர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டியை போன்று விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி, சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து இந்நிலையில், தமிழ் புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் குறிப்பாக எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு. வரும் புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோஷங்களையும் தரட்டும், அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும், அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.
அவரைத்தொடர்ந்து அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம், ஆகிய இருவரும் சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த நன்னாளில் உலகெங்கும் வாழ்கின்ற எங்கள் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இனிய “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், மீண்டும் ஒருமுறை எங்களது நெஞ்சார்ந்த “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்.” என கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உலகிலேயே தொன்மையான இலக்கிய, இலக்கண வளங்கள் நிறைந்த தமிழைப் பேசும் தமிழ் மக்களுக்கு கனிவான தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி நிறையட்டும் என பிராத்திக்கிறேன். “சுபகிருது” புத்தாண்டு, எல்லா சுபங்களையும் கொண்டு வந்து சேர்க்கட்டும் என வாழ்த்துகிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.