“மதுபான பாட்டிலை சொருகி, என்னை கடுமையாக துன்புறுத்தி பாலியல் கொடுமை செய்தார்” என்று, பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்” ஹீரோ மீது, அவரது முன்னாள் மனைவியான பிரபல நடிகை பகிரங்கமாக குற்றச்சாட்டிய நிலையில், அதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், நடிகர் ஜானி டெப் வெற்றி பெற்று உள்ளார்.
அதாவது, பிரபல ஹாலிவுட் படமான “பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்” படம், உலகம் முழுவதும் பேசப்பட்டது. இந்த படத்தின் மூலமாக உலக அளவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் நடிகர் ஜானி டெப்.
“பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்” படத்தில், “கேப்டன் ஜாக் ஸ்பேரோ” என்னும் கதபாத்திரத்தில் நடித்து, அதன் மூலமாக அவர் உலக புகழ் பெற்றார். அவருக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, “ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்” உள்ளிட்ட பல ஹாலிவுட் சினிமாக்களில், நடித்து தனது திறமையை இன்னும் வெளிப்படுத்தி புகழ் பெற்று திகழ்ந்த நடிகர் ஜானி டெப்புக்கும், அவரது 2 வது மனைவியான நடிகை ஆம்பர் ஹெர்ட்டுக்கும், கடந்த பல ஆண்டுகளாகவே பெரும் சட்டப் போராட்டமே நடந்துக்கொண்டிருக்கிறது.
“அக்வாமேன்” உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்து ரசகர்களை தனது அசத்தியானமான நடிப்பால் கட்டிப்போட்ட “அம்பெர் ஹெர்ட்” என்னும் நடிகையை, நடிகர் ஜானி டெப், கடந்த 2015 ஆம் ஆண்டு 2 வதாக திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், தனது 2 வது மனைவியான “அம்பெர் ஹெர்ட்” டை, கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
இதனையடுத்து, பிரபல ஹாலிவுட் நடிகையான அம்பெர் ஹெர்ட், “கணவர் ஜானி டெப், என்னை அடித்து துன்புறுத்தினார் என்றும், எனது விரலை துண்டித்தார் என்றும், இதற்கு நஷ்ட ஈடாக அவர் 350 கோடி ரூபாய் எனக்கு தர வேண்டும்” என்றும், பல ஆதாரங்களை அவர அந்நாட்டின் நீதிமன்றத்தில் சமர்பித்து, குற்றம்சாட்டினார்.
இதன் காரணமாக, திரையுலகில் ஜானி டெப்பின் செல்வாக்கு அப்படியே அடியோடு சரியத் தொடங்கியது.
இதையடுத்து, தனது முன்னாள் மனைவிக்கு எதிராக ஜானி டெப் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 3 ஆண்டுகள் விசாரணை நடந்த நிலையில், கடந்த மாதம் கூட இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் சூடுப்பிடித்த போது, நடிகை அம்பெர் ஹெர்ட் அப்போது ஒரு புதிய குற்றச்சாட்டை சுமத்தினார்.
அதில், “ஆஸ்திரேலியாவுக்கு நாங்கள் சுற்றுலா சென்றிருந்த போது, ஜானி டெப் எனது உறுப்பில் மதுபான பாட்டிலை சொருகி பாலியல் ரீதியாக அவர் என்னை மிக கடுமையாக டார்ச்சர் செய்தார்” என்று, அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
“இதன் காரணமாக எனது பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டு, நான் சிகிச்சைப் பெற்றேன்” என்றும், அதற்கான ஆதாரங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளார்.
குறிப்பாக, “மற்றவர்களை போல் நானும் ஜானி டெப் நல்லவர் என்று அவரை நம்பித் தான் திருமணம் செய்தேன், ஆனால், அவர் குடி போதையில் அவர் கொடுக்கும் பாலியல் டார்ச்சர்கள் பிடிக்காமல் தான், நான் விவாகரத்து செய்ய முடிவுக்கே வந்தேன்” என்றும், நடிகை ஆம்பர் ஹெர்ட் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.
எனினும், இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டை சுமத்தி வருவதால், சினிமா ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
என்றாலும், நடிகர் ஜானி டெப் அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில், 3 ஆண்டுகள் விசாரணை நடந்த நிலையில், ஜானி டெப்புக்கு ஆதரவாக தற்போது அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்த வழக்கில், “நடிகர் ஜானி டெப் குற்றமற்றவர்” என்று, நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.
அத்துடன், “நடிகர் ஜானியின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலேயே ஆம்பர் கட்டுரை எழுதியதாகவும், ஜானி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை” என்றும், நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.
மேலும், “பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவதூறு வழக்கு தொடர்ந்த ஆம்பர், தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இந்திய ரூபாய் மதிப்பில், 116 கோடி இழப்பீடு செலுத்த ஆம்பர் ஹேர்ட்டுக்கு” நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
அதே நேரத்தில், ஜானியின் வழக்கறிஞர் மீடியாக்களிடம் பேசும் போது, “தன்னை அவதூறாக பேசியதாக ஆம்பர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் ஆம்பருக்கு, நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், ஒட்டு மொத்தமாக ஆம்பர் தொடந்த வழக்கில் ஜானிக்கு ஆதரவான தீர்ப்பே வெளியானது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்” என்றும், அவர் தெரிவித்தார்.
முக்கியமாக, “தனது வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக” இந்த தீர்ப்பு குறித்து நடிகர் ஜானி டெப் கருத்து கூறியுள்ளார். இவற்றுடன், உண்மை ஒரு போதும் வீழ்வதில்லை என்றும், அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.