கல்யாணத்துக்கு வந்த பெண்ணை கடத்திச் சென்று 10 பேர் கொண்ட கும்பல் விடிய விடிய மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிரச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் தான் இப்படி ஒரு உச்சக்கட்ட கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் இளம் பெண் அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்த இளம் பெண், பக்கத்து ஊரில் வசிக்கும் தனது உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக, தனது நெருங்கிய தோழிகளுடன் சேர்ந்து காலையில் சென்றிருக்கிறார்.
பின்னர், உறவினரின் திருமண நிகழ்வை முடித்துக்கொண்டு, அரவு நேரம் ஆன மாலை நேரத்தில் தனது தோழிகளுடன் அருகில் உள்ள தனது ஊருக்கு திரும்பியிருக்கிறார் அந்த இளம் பெண்.
அப்போது, வரும் வழியில் அந்த தோழிகள் எல்லாம் அவரவர் வீடுகளுக்கு சென்ற நிலையில், குறிப்பிட்ட இந்த பெண் அமுதா மட்டும், சில தூரத்திற்கு தனியாக நடந்து சென்றுக்கொண்டு இருந்து உள்ளார்.
இளம் பெண் ஒருவர், இரவு நேரத்தில் தனியாக வீட்டுக்கு நடந்து செல்வதைக் கண்ட அதே கல்ணாயத்திற்கு வந்திருந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணிற்குத் தெரியாமல் மெதுவாக பின் தொடர்ந்து சென்று உள்ளனர்.
அப்போது, அந்த பகுதியில் ஒரு தனிமையான இடத்தில் அந்த பெண் நடந்து வந்துக்கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த அந்த 10 பேரும், அந்த பெண்ணை கடத்திச்க்கொண்டு அங்குள்ள ஒரு மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்று உள்ளனர்.
அங்கு, ஒருவர் மாறி ஒருவர் என்று, அந்த 10 பேரும் அந்த இளம் பெண்ணை விடிய விடிய கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
இப்படியாக, அந்த 10 பேரின் பாலியல் இச்சைகள் எல்லாம் தீர்ந்த பிறகு, பொழுது விடிந்த அந்த தருணத்தில், அந்த பெண்ணை அவர்கள் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகில் கொண்டு விட்டு விட்டு அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளனர்.
அதன் பிறகு, அங்கிருந்து எப்படியோ எழுந்திருக்க முடியாமல் எழுந்து தள்ளாடி தள்ளாடி வீட்டிற்கு சென்ற அந்த பெண், தனது வீட்டிற்கு சென்று உள்ளார்.
அங்கு, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி தனது வீட்டாரிடம் கூறி, அந்த பெண் கதறி அழுதிருக்கிறார்.
இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட அந்த 10 பேரையும் அதிரடியாக கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.