#IPL2022 நேற்றைய லீக் போட்டியில் #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், #RCB பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
#IPL2022 நேற்று நடைபெற்ற 13 வது லீக் போட்டியில், #RR ராஜஸ்தான் அணி ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்தும், #RCB பெங்களூரு அணி மீண்டும் வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் களம் கண்டது. இரு அணியிலும் எந்த மாற்றமும் இல்லை. இந்த தடவையும், ராஜஸ்தான் 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே களமிறங்கியது.
இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளேசிஸ், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால், #RR ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர்.
இதில், #RR வீரர் ஜெய்ஸ்வால் வெறும் 6 ரன்கள் அவுட்டாகி அதிர்ச்சி அளித்த நிலையில், அதனைத் தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் களமிறங்கிறங்கி, நிதானமாக விளையாடினர். இதனால், பவர்பிளே முடிவில் #RR அணியானது ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது.
அப்போது, தேவ்தத் பட்டிக்கல் 37 ரன்களுக்கு வெளியேற, ஜாஸ் பட்லர் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய #RR கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் வந்த ஹெட்மயர் - பட்லர் ஜோடி, இறுதி நேரத்தில் அடித்து நொறுக்கிய நிலையில், #RR ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் #RCB பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் டூ பிளேசிஸ் - அனுஜ் ராவத் களமிறங்கி நிதானமாக விளையாடினர்.
அப்போது, டூ பிளேசிஸ் 29 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார். பின்னர் அனுஜ் ராவத் 26 ரன்களில் வெளியேறிய நிலையழல், விராட் கோலி 5 ரன்களில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தனர். இந்த முறை விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியது சஹால் தான்.
பின்னர், டேவிட் வில்லி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேற, #RCB பெங்களூரு அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி நின்றது. இதனால், இந்த ஆட்டமானது #RR பக்கம் திரும்பியது.
பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் - ஷபாஸ் அகமத் ஜோடி சேர்ந்து, ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து சிக்சர் பவுண்டரிகளாக விளாசி தள்ளினர்.
முடிந்த போனதான நினைத்த போட்டியை, அஸ்வின் ஓவரில் 21 ரன்கள் அடித்து நொறுக்கி, ஆக்ஸிஜன் இறங்கினார் தினேஷ் கார்த்திக்.
இதனால், ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு இந்த ஜோடி கடும் சவால் விடுத்தது. இதனால், அடுத்தடுத்த 2 ஓவர்களில் மட்டும் இந்த ஜோடி அதிரடியாக விளையாடி 37 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்து வீசிய பிரசித் கிருஷ்ணா ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸர் என 13 ரன்களை அடித்து நொறுக்கி தள்ளினர்.
இதனால், கடைசி ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது. அப்போது, சிக்ஸர் அடித்து பிரமாண்டமாக ஆட்டத்தை முடித்து வைத்தார் ஹர்சல் படேல்.
இதனால், #RCB பெங்களூரு அணியானது, 19.1 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக, இந்த ஐபிஎல் சீசனில் #RCB ஆர்சிபி தனது 2 வது வெற்றியை பெற்று உள்ளது.
இந்த போட்டியில், ஆட்டத்தை மாற்றி அதிரடியாக நொறுக்கி அள்ளிய தினேஷ் கார்த்திக், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே, இன்று இரவு நடைபெறும் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் - கேகேஆர் அணிகள் மோதுகின்றன.