#IPL2022 நேற்றைய போட்டியியில் நடுவரின் தீர்ப்பை மீறி செயல்பட்ட #DC அணியின் கேப்டன் ரிஷப் பந்துக்கு, ஐபிஎல் நிர்வாகம் அதிரடியாக 100 சதவீதம் அபராதம் விதித்து உள்ளது.
#IPL2022 சீசினன் 34 வது லீக் ஆட்டத்தில் #DC- #RR அணிகள் மோதிய நிலையில், முதலில் விளையாடி #RR அணியானது அதிக பட்சமாக 222 ரன்கள் குவித்தது.
இதனால், 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் #DC டெல்லி அணி களமிறங்கிய நிலையில், ஆட்டத்தின் கடைசி ஓவரில் டெல்லி அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, #RR பவுலர் அந்த கடைசி ஓவரை ஓபெட் மெக்காய் வீசினார்.
அந்த கடைசி ஓவரில், முதல் 3 பந்துகளை #DC வீரர் போவல் அடுத்தடுத்து சிக்ஸர்களாக பறக்கவிட்ட நிலையில், ஆட்டத்தின் போக்கு டெல்லி பக்கம் மாறியது. ஆனால், அப்போது வீசப்பட்ட அந்த 3 வது பந்து ஃபுல் டாஸாக வந்த பந்தை தான், போவெல் சிக்ஸருக்கு அடித்து வானவேடிக்கை காட்டியிருந்தார்.
என்றாலும், “அந்த பந்து நோ பால்” என்று, அம்பயரிடம் கேட்டார். ஆனால், “இந்த பந்து சரியான பந்து தான்” என்று, நடுவரும் பிடிவாதமாகஇருந்தார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த டெல்லி அணியின் வெளியே நின்றிருந்த பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் என அனைவரும் நடுவரின் முடிவுக்கு எதிராக கடும் வாக்குவாதம் செய்தனர்.
இந்த வாக்குவாதத்தில், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பண்ட், கள வீரர்களிடம் “நீங்கள் யாரும் விளையாட வேண்டாம், வெளியே வாருங்கள், ஏமாற்றுகிறார்கள்” என்று, அழைத்தார். இதனால், களத்தில் நின்றிருந்த இரு பேட்ஸ்மேன்களும் வெளியே கிளம்ப புறப்பட்டுவிட்டனர். அப்போது, அந்த களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, வெளியே நின்றிருந்த ஒரு பயிற்சியாளரை உள்ளே சென்று நடுவரிடம் பேசும் படி, #DC அணியின் கேப்டன் ரிஷப் பந்து அனுப்பி வைத்தார். அதன் படி, உள்ளே வந்த #DC அணியின் பயிற்சியாளர் நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனாலும் நடுவர் பிடிவாதமாக இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, அந்த நடுவர் இரு வீரர்களிடம் ஏதோ பேசிய நிலையில், அதன் பிறகே அந்த இரு வீரர்களும் பேட்டிங் செய்ய வந்தனர். எனினும், டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 207 ரன்கள் மட்டுமே எடுத்தது, போராடி தோல்வி அடைந்தது.
ஒரு வேளை, அந்த ஒரு பந்திற்கு நோ பால் கொடுத்திருந்தால், நேற்றைய போட்டியின் முடிவு வேறு மாதிரியாக அமைந்திருக்கலாம்” என்றும், பேசப்படுகிறது.
இதனால், போட்டியில் நடுவர்களின் பிடிவாதம் காரணமாக, தற்போது சர்ச்சை வெடித்து உள்ளது. தற்போது, இது குறித்த ஆதாரங்கள் வெளியாகி கிரிக்கெட் உலகில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. எனினும், இதில் 3 வது நடுவர் தலையிட்டு சரியான முடிவை எடுக்க தவறிவிட்டார் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், #IPL2022 லீக் போட்டியின் போது நடுவரின் தீர்ப்பை மீறி செயல்பட்ட காரணத்திற்காக, #DC அணியின் கேப்டன் ரிஷப் பந்துக்கு, ஐபிஎல் நிர்வாகம் அதிரடியாக 100 சதவீதம் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஐபிஎல் நிர்வாகம், “நோ பால் கொடுக்காத ஒரு காரணத்திற்காக, தனது அணி வீரர்களை, #DC அணியின் கேப்டன் ரிஷப் பந்து, பெவிலியன் திரும்புமாறு கூறிய காரணத்திற்காக, இந்த அபராதம்” விதிக்கப்பட்டு உள்ளதாக” விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
அதே போல், கேப்டன் ரிஷப் பந்துடன் சேர்ந்து, சக வீரர் ஷர்துல் தாக்கூர் அடாவடியாக வாக்குவாதம் செய்ததால், அவருக்கும் போட்டிக்கான ஊதியத்தில் 50 சதவீதத்தை அபராதமாக விதித்து உள்ளது.
குறிப்பாக, போட்டி நடந்துக்கொண்டிருக்கும் போது மைதானத்திற்கு உள்ளே சென்று நடுவர்களிடம் வாக்கு வாதம் செய்த காரணத்திற்காக, #DC அணியின் உதவி பயிற்சியாளர் பிரவின் ஆம்ரே, ஒரு போட்டியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதாவது, உதவி பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு, போட்டி ஊதியத்தின் 100 சதவீத தொகையையும் அபராதமாக விதித்தது மட்டுமின்றி, அடுத்த ஒரு போட்டியில் அவர் பங்கேற்கவும் அதிரடியாக தடை விதித்து பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுத்து உள்ளது.