இந்தியாவில் சைபர் குற்றங்களானது கடந்த 3 ஆண்டில் 5 மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பதாக, நாடாளுமன்ற குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளதாக, கடந்த ஆண்டு அறிக்கை ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இது தொடர்பாக, தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விரபங்களை வெளியிட்டு அந்த தகவலை உறுதி செய்தது.
இது குறித்து, அப்போது தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளி விரபங்களில், “கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400 சதவீதம் அதிகரித்திருப்பதாக” தெரிவிக்கப்பட்டு இருந்தது.
“இவற்றில் பெரும்பாலானவை, குழந்தைகளை பாலியல் ரீதியாக சித்தரித்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது, அது தொடர்பான தகவல்களை பரிமாறுவது உள்ளிட்டவை அடங்கம்” என்றும், கடந்த ஆண்டு, தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியிருந்தது.
தற்போது, அதன் தொடர்ச்சியாக “இந்தியாவில் சைபர் குற்றங்களானது கடந்த 3 ஆண்டில் 5 மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பதாக” அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக நாடாளுமன்ற குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
இது குறித்து, “கடந்த 3 ஆண்டில் 5 மடங்கு அளவிற்கு சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக” நாடாளுமன்ற குழுவிடம், தகவல் தொடர்பு பாதுகாப்பு விஷயங்களை கவனிக்கும் அமைப்பு, ஆய்வறிக்கை ஒன்றை தற்போது சமர்பித்து இருக்கிறது.
அந்த தகவல் தொடர்பு பாதுகாப்பு விஷயங்களை கண்காணித்து வரும் மத்திய அரசின் ஏஜென்சியான, இந்திய கணினி அவசரநிலைப் பதில் குழு (செர்ட்-இன்), சில தரவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது.
இது குறித்த விபரங்களை தகவல் தொழில் நுட்ப அமைச்சு நாடாளுமன்ற குழுவிடம் முன்னதாக அளித்து உள்ளது.
அந்த தகவலில் “இந்தியாவில் சைபர் குற்றங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் வரை பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையின் படி பார்க்கும் போது, 5 மடங்கு அளவிற்கு அதிகரித்து உள்ளது” தெரிய வந்திருக்கிறது.
“கடந்த 2018 ஆம் வழக்குகளின் எண்ணிக்கையானது 2,08,456 ஆக இருந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது 14,02,809 ஆக அதிகரித்து உள்ளது. அதாவது, இது, கடந்த 2018 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது கிட்டதட்ட 5 மடங்குக்கு அளவுக்கு அதிகமாக அதிகரித்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.
“தற்போது, இந்த நடப்பாண்டின் முதல் 2 மாதங்களில், 2,12,485 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது” தெரிய வந்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக, “கொரோனா லாக்டவுன் காலத்தில், வீட்டிலிருந்தே பலர் ஆன்லைனில் வேலை செய்து கொண்டிருந்த காரணத்தால், சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடந்து உள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இதுபோன்ற குற்றங்கள் அதிக அளவில் நடந்திருப்பதாகவும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன.
“இத்தகைய சூழ்நிலையில், சைபர் குற்றத்துடன் தொடர்புடைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அவசரத் தேவை குறித்து ஒன்றிய அரசு ஆலோசனைகளை நடத்தி வருகிறது என்றும், தற்போதைய பிரச்னைகளை சமாளிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 7,500 க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என்றும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
“கடந்த 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு குறித்து 193 நாடுகளில் நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வில், இந்தியா 10 வது இடத்தில் இருக்கிறது. அதே கடந்த 2018 ஆம் ஆண்டில் 47 வது இடத்தில் இந்தியா இருந்தது” குறிப்பிடத்தக்கது.