குழந்தைகளுக்கான பள்ளி பாட புத்தகத்தில் ஆபாசப் படங்கள் இடம் பெற்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விசாரணைக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
சீனாவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அதாவது, சீனா நாட்டில் பள்ளி குழந்தைகளின் பாடங்கள் தற்போது புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.
அந்த புதிய பாடத்திட்டத்தில், பள்ளிக் கூட சிறுவர் - சிறுமிகளின் பாட புத்தகத்தில் இடம் பெற்ற ஆபாச படங்கள் தான், தற்போது அங்கு பெரும் சர்ச்சையாகி வெடித்து, அந்நாடு முழுவதிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதன்படி, சீனா நாட்டில் உள்ள பீஜிங் நகரில், செயல்ட்படு வரும் பள்ளிகளுக்கான 3 வயது முதல் 6 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கான பாட புத்தகத்தில் இப்படியான ஒரு ஆபாசப் படங்கள் இடம் பெற்று உள்ளது.
குழந்தைகளின் பாட புத்தகத்தில் இப்படியான ஆபாசப் படங்கள் வெளியாகி, அந்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி வெடித்து, இது பற்றி விசாரணை நடத்த அதிரடியாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் குறித்து சீன நாட்டின் சினா வெய்போ உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளத்தில் இணையவாசிகள் பலரும் தங்களது கண்டனங்ளை தெரிவித்து, எதிர்மறையான கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, குழந்தைகளுக்கான அந்த பாட புத்தகத்தில், சில ஓவியங்கள் குழந்தைகளை மையப்படுத்தி வரையப்பட்டு இருக்கின்றன. அப்படியான அந்த படத்தில், சிறுவர், சிறுமிகளின் ஆபாச நிலையிலான காட்சிகள், நாக்கு வெளியே தள்ளி கொண்டும், கோணலான வாய், ஓரப்பார்வை உள்ளிட்டவற்றுடன் சிறுவர்கள் தோன்றும் ஆபாசமான செயல்கள் கொண்ட காட்சிகளும் இடம் பெற்று இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக, அந்த சிறுவர்களுக்கான ஓவியத்தில், சில குழந்தைகள் அமெரிக்க தேசிய கொடியை ஆடையாக அணிந்த படியான காட்சிகளும் அதில் இடம் பெற்று இருக்கின்றன.
இவைத் தவிர, இன்னும் சில சர்ச்சைக்குரிய ஆபாசக் காட்சிகளும் அதில் இடம் பெற்ற ஓவியங்களாக வரையப்பட்டு இடம் பெற்று உள்ளன.
இதனால், பாட புத்தகம் வெளி வருவதற்கு முன்பு முறையாக, படித்து பார்க்கப்படாமலும் மற்றும் மறு ஆய்வு செய்யப்படாமலும் இருந்து உள்ளது என்ற சந்தேகத்தை, அந்நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலரும் தற்போது கேள்விகளாக எழுப்பி உள்ளனர்.
“இந்த விவகாரம் பற்றி, பள்ளி பாட புத்தகங்கள் மீது ஆய்வு நடத்தும் படி” சீன கல்வி அமைச்சகம் தற்போது அதிரடியான உத்தரவை பிறப்பித்து உள்ளது.
இப்பியாக, சீனா முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்து கிளம்பி உள்ள இந்த விவகாரம், இன ரீதியான மற்றும் ஆபாசப் படங்களை கொண்ட புத்தக வெளியீட்டாளர்களிடம் விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும்” அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த படம் தொடர்பான செய்திகள், தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.