சென்னை சேர்ந்த மாணவி ஏழு பக்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு மதுரையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் செந்திலின் மகள் திவ்யதர்ஷினி. 15 வயதான திவ்யதர்ஷினி திருவான்மியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் திவ்யதர்ஷினி கடந்த 9-ம் தேதி அன்று திடீரென்று வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார். திவ்யதர்ஷினி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடியும் உறவினர்கள் மற்றும் மகளின் தோழிகளின் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதனைதொடர்ந்த்து திவ்யதர்ஷினியை மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள குல மங்கலத்தில் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் திவ்யதர்ஷினி தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் வந்திருக்கிறது. மாணவி திவ்யதர்ஷினி தூக்கில் தொகுவதைக்கண்டு தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது அங்கு கிடந்த செல்போனை அதில் உள்ள எண்கள் மூலம் விசாரித்தபோதுதான் அந்த சிறுமி மாயமான சென்னை மாணவி திவ்யதர்ஷினி என்பது தெரியவந்திருக்கிறது.
மேலும் மாணவி திவ்யதர்ஷினி எதற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு வந்து தற்கொலை செய்ய வேண்டும் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை தொடங்கியிருக்கிறார்கள். தற்கொலைக்கு முன்பு மாணவி திவ்யதர்சினி எழுதிய 7 பக்க கடிதமும் போலீசாரிடம் சிக்கி இருக்கிறது. அந்த கடிதத்தில், பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் நான் சரியாக படிக்கவில்லை என்று ஆசிரியர்கள் சொன்னார்கள். நான் நன்றாக படிக்க வேண்டும் என பெற்றோர்கள் அறிவுரை கூறினார்கள். ஆனாலும் நான் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். எனக்கு நிறைய படிக்க ஆசை. ஆனால் படிப்பு வராத காரணத்தால் நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்யப்போகிறேன் என்று அவர் உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து போலீசார் திவ்யதர்ஷினியின் உடலை மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மாணவியின் உடலை சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.