திருமண மேடையில் மணமக்கள் ஒருவரை ஒருவர் சராமாரியாக அறைந்து கொண்ட சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
இந்தியாவில், வட மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு, இந்தியாவில் தற்போது தான் திருமணங்கள் வரிசைக்கட்டி அதிக அளவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
அதன்படி, தற்போது இந்தியாவின் வட மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வு தொடர்பான வீடியோ ஒன்று, இணையத்தில் தற்போது பெரிய அளவில் வைரலாகிக்கொண்டு இருக்கிறது.
அந்த வீடியோவில், மண மேடையில் மணமகனும் - மணமகளும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அறைந்து கொள்ளுகின்றனர்.
அதாவது, அந்த வீடியோவின் தொடக்கத்தில் மணமேடையில் மணமக்கள் இருவரும் நிற்கின்றனர். அப்போது, திருமண கோலத்தில் உள்ள மணமகள், அந்த மணமகனுக்கு இனிப்புகளை ஊட்டி விட முயற்சிக்கிறார்.
ஆனால், மணமகள் ஊட்டி விடும் அந்த இனைப்பை வாயில் வாங்காமல், அந்த மணமகனோ தன் மனைவி மீதும் அவர் வழங்கும் இனிப்பின் மீது கவனம் செலுத்தாமல், புகைப்படத்தை சரியாக எடுக்கப்படுவதை உறுதி செய்யும் விதமாக, தொடர்ந்து அந்த புகைப்பட கலைஞரிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்.
இதனால், அந்த மணமகள் தந்த இனிப்பை ஊட்டிக்கொள்ளாமல் தனக்குத் தெரியாமலேயே அவர் புறக்கணிப்பபோல் அந்த தருணம் அமைந்தது.
இப்படியாக, அந்த மணமகனுக்கு அந்த பெண், பல முறை இனிப்பு வழங்க முயற்சித்த பிறகும், அதனை அந்த மணமகன் வாங்கிக்கொள்ளாமல், அதனை கண்டுக்கொள்ளாமல் இருந்ததால், அந்த மணமகள் தனது பொறுமையை இழந்து, கடும் கோபத்தில் தன் கையில் இருந்த அந்த இனிப்பை அந்த மணமகனின் முகத்தில் வைத்து தேய்த்து உள்ளார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மணமகன், இந்த செயலை கண்டு கடும் கோபம் அடைந்த நிலையில், அந்த மணமகளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த மணமகள், உடனே பதிலுக்கு அந்த மணமகன் மீது கன்னத்தில் ஒரு அறை விடுகிறார்.
இப்படியாக, அந்த மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி 3 முறை ஒருவரை மாற்றி ஒருவர் கன்னங்களில் அறைந்துகொள்கின்றனர்.
இதனையடுத்து, அவர்கள் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இப்படியாக முடியும், அந்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை, பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். எனினும், இந்த வீடியோவின் உண்மை தன்மை பற்றி தற்போது ஆராயப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.