இளம் பெண் ஒருவர், இளைஞனை மோசடியாக பணம் பறிக்கும் நோக்கத்தில் ஆன்லைன் செக்ஸ்க்கு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், எம்பிஏ படித்து முடித்துவிட்டு அந்த பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த இளைஞர், எப்போதும் ஆன்லைனில் அதிகம் நேரம் மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன், அந்த இளைஞர் ஆன்லைனில் உள்ள ஒரு “டேட்டிங் ஆப்”பை பதிவிரக்கம் செய்து, அதில் சாட் பண்ணிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த “டேட்டிங் ஆப்” பிள், எதிர் முனையில் சாட்டிங் செய்த சோகினா என்ற இளம் பெண், அந்த இளைஞனுடன் அடிக்கடி தினமும் சாட்டிங் செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தான், அந்த பெண் அந்த இளைஞரின் செல்போன் எண்ணை, சாட்டிங் மூலமாக பெற்று, அந்த இளைஞனுக்கு வீடியோ கால் செய்து உள்ளார்.
அதுவும், நள்ளிரவு நேரத்தில் அந்த வீடியோ கால் அழைப்பு வந்திருக்கிறது.
அப்போது, அந்த நள்ளிரவு நேரத்தில் அந்த வீடியோ கால் அழைப்பை எடுத்த அந்த இளைஞன் முன்பு, எதிர் முனையில் அழைத்த அந்த பெண், திடீரென்று, நிர்வாணமாகி நின்று உள்ளார்.
இதனைப் பார்த்து, ஒரு மாதிரியான அந்த இளைஞனும் தனது ஆடைகளை கழற்றி, அந்த பெண்ணின் முன்பு நிர்வானமாக நின்றிருக்கிறார்.
இந்த சந்தர்ப்பத்தில், அந்த இளம் பெண் அந்த இளைஞனின் நிர்வாண காட்சியை, தனது போனில் ரெக்கார்ட் செய்து உள்ளார்.
இதனையடுத்து, அந்த பெண் அந்த இளைஞனுக்கு அவர் சம்மந்தப்பட்ட அந்த நிர்வாண படத்தை அனுப்பி வைத்திருக்கிறார்.
இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞன், பதறிப்போய் உள்ளார்.
அப்போது, சாட்டிங் செய்த அந்த பெண், “இந்த வீடியோவை வெளியே பகிராமல் இருக்க உடனடியாக எனக்கு10 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்ப வேண்டும்” என்று, மிரட்டி இருக்கிறார்.
அத்துடன், “கேட்ட பணத்தை தரவில்லை என்றால், இந்த வீடியோவை உனது பெற்றோருக்கும், உனது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து, உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்” என்றும், கடுமையாக மிரட்டி இருக்கிறார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், சம்மந்தப்பட்ட அந்த பெண்ணின் மீது, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட அந்த டேட்டிங் ஆப் மீதும், குறிப்பிட்ட அந்த பெண் மீதும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணியல், அந்த இளம் பெண்ணின் போன் நம்பர், சோனு குமார் என்பவரின் பெயரில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த நபர் யார் என்று தேடும் பணியில், போலீசார் தற்போது தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
ஆண்கள், பெண்களை மோசடியாக ஏமாற்றிய காலம் மாறி, தற்போது சில பெண்கள், ஆண்களை ஏமாற்றும் காலம் வந்துவிட்டது எதிர்கால சமூகத்திற்கு பெரும் ஆபத்தாக முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
“திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்பே பேருண்மை.