குழந்தைகளையும் பாதிக்கும் கொரோனா..
Galatta | Apr 18, 2021, 12:44 pm
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலையில் தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் முதல் அலையில் குழந்தைகள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகவில்லை. ஆனால் தற்போது பரவி வரும் இரண்டாவது அலையில் கடந்த 10 நாட்களாக பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,501 பேர் தங்களது உயிரை கொரோனாவிற்கு பலி கொடுத்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தற்போது வரை 1,47,88,109 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில் 18,01,316 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 1,28,09,643 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12,26,22,590 பேருக்கு கொரோனாத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 1,77,150 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வெளியில் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என மருத்துவர்களை அறிவுறுத்துகின்றனர்.