தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.
இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.செம்பருத்தி,ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி,பூவே பூச்சூடவா என்று 1000 எபிசோடுகளை கடந்த சீரியல்கள் ஆனாலும் கோகுலத்தில் சீதை,நீதானே எந்தன் பொன்வசந்தம்,புது புது அர்த்தங்கள் என்று புதிய சீரியல்கள் என சூப்பர்ஹிட் சீரியல்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
பல தொடர்கள் மூலம் பல நட்சத்திரங்களை ஜீ தமிழ் உருவாக்கியுள்ளனர்.அப்படி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் தொடர்கள் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி மற்றும் சத்யா தொடர்கள்.இந்த இரு தொடர்களுக்கென்றும் தனி தனியே பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது சில எதிர்பாராத காரணங்களால் இந்த இரண்டு தொடர்களும் வரும் வாரத்துடன் நிறுத்தப்படுவதாக ஜீ தமிழ் அறிவித்துள்ளனர்.இந்த இரண்டு தொடர்களின் இறுதி அத்தியாயங்கள் வரும் அக்டோபர் 24ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்றும் அறிவித்துள்ளனர்.சட்டென இரண்டு பெரிய சீரியல்கள் நிறுத்தப்படுவதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.