விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.இந்த தொடரில் தனது நடிப்பால் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் ஷிவானி நாராயணன்.தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்திருந்தார்.

நடனத்தில் ஆர்வம் கொண்ட ஷிவானி ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார்.இவரது நடன வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடரில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார் ஷிவானி நாராயணன்.கொரோனா காரணமாக இந்த தொடரின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார் ஷிவானி.ரசிகர்களுடன் கலந்துரையாடுவது,அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் லைவ் வருவது என்று எப்போதும் இருந்து வந்தார் ஷிவானி.நடனம் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்ட ஷிவானி,தனது நடன மற்றும் ஒர்க்கவுட் வீடியோக்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.ஷிவானியின் புகைப்படங்களும்,வீடியோக்களும் ரசிகர்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து அனைத்து தொடர்களின் ஷூட்டிங்குகளும் தொடங்கின.சன் டிவி,விஜய் டிவியில் சில சீரியல்கள் மட்டும் நடிகர்கள் வரமுடியாததால் கைவிடப்பட்டது.சில சீரியல்களில் நடிகர்களை மாற்றிவிட்டு ஷூட்டிங்கை தொடர்ந்து வருகின்றனர்.விறுவிறுப்பாக கடந்த 8ஆம் தேதி முதல் ஷூட்டிங்குகள் நடைபெற்று வருகிறது.புதிய எபிசோடுகள் வரும் ஜூலை 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஷிவானி ஹீரோயினாக நடித்து வந்த ரெட்டை ரோஜா தொடரில் இருந்து விலகியுள்ளார் என்றும் அவருக்கு பதிலாக சித்து பிளஸ் 2,கவண்,மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் ,விஜய் டிவியில் தாழம்பூ தொடரில் நடித்தவருமான நடிகை சாந்தினி தமிழரசன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.