பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா.இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.
ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தனது கணவர் தினேஷுடன் இணைந்து ரச்சிதா நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விறுவிறுப்பாக நகர்ந்து வந்த இந்த தொடரின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.சில மாதங்களுக்கு பிறகு இந்த தொடரின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.தற்போது இந்த சீரியலின் நாயகி ரச்சிதா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.ஜோதி என்ற கேரக்டர் தான் என்னை தமிழில் பிரபலமாக்கியது.தமிழ் மக்கள் என்னை அன்பும் அரவணைப்பும் கொடுத்து என்னை தமிழ்நாடு மருமகளாக ஏற்றுக்கொண்டனர்.அதற்கு பிறகு நிறைய சீரியல்களில் நடித்தாலும் ஜோதி போன்ற கேரக்டர் கிடைக்கவில்லை.
பல வருடங்கள் கழித்து நானும் என் கணவரும் இணைந்து முதலில் நாங்கள் நடித்த கார்த்திக்-ஜோதி கேரக்டர்களை மீண்டும் ரசிகர்களுக்கு கொண்டுவர முயற்சிசெய்துள்ளோம்.நாச்சியார்