தற்போதைய நிலையில் அனைத்து படங்களிலும் இடம்பெற்றிருக்கும் ஒரு நடிகர் என்றால் அது யோகிபாபு தான்.இவர் இல்லாத படங்கள் மிகவும் குறைவு தான்.தனக்கென ஒரு ஸ்டைலையும்,தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருக்கும் இவர் விஸ்வாசம்,பிகில்,தர்பார் என அனைத்து பெரியஹீரோ படங்களிலும் நடித்துவிட்டார்.

மேலும் கூர்கா,தர்மபிரபு,பன்னிகுட்டி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்துவரும் அயலான் மற்றும் டாக்டர் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார்.தற்போது இவரது திருமணம் நடந்து முடிந்துள்ளது.

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை (05.02.2020) யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் நண்பர்கள்,உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது . திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.