தமிழ் சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக அடுத்த நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரம் நாயகர்கள் அனைவருடனும் இணைந்து தற்போது இன்றியமையாத நகைச்சுவை நடிகராக மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் யோகி பாபு இந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை தளபதி விஜயின் வாரிசு, ஐஸ்வர்யா ராஜேஷின் தி கிரேட் இந்தியன் கிச்சன், காஜல் அகர்வாலின் கோஷ்டி, விஜய் ஆண்டனியின் தமிழரசன் மற்றும் பிச்சைக்காரன் 2, ரெஜினா கெசன்ட்ரா & காஜல் அகர்வால் இணைந்து நடித்த கருங்காப்பியம், மிர்ச்சி சிவா நடிப்பில் காசேதான் கடவுளடா ரீமேக், சித்தார்த்தின் டக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகியிருக்கும் மாவீரன் திரைப்படத்திலும் நடித்த யோகி பாபு அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜெயிலர், ஷாருக் கான் - இயக்குனர் அட்லி கூட்டணியில் செப்டம்பர் மாதம் வெளிவர இருக்கும் ஜவான், 2023 தீபாவளி ரிலீஸாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் அயலான், வருகிற ஜூலை 28ஆம் தேதி ஹரிஷ் கல்யாண் நடிப்பில் MS.தோனி தயாரிப்பில் வெளிவர இருக்கும் LGM ஆகிய படங்களில் யோகி பாபு மிக முக்கிய நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார். இதுபோக சுந்தர்.C.யின் அரண்மனை 4 மற்றும் விஷால் இயக்குனர் ஹரி கூட்டணியில் தயாராக இருக்கும் #Vishal34 உள்ளிட்ட படங்களில் யோகி பாபு நடிக்க இருக்கிறார்.

நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாது தொடர்ச்சியாக அழுத்தமான முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துவரும் நடிகர் யோகி பாபு அது மாதிரியான கதை களங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். குறிப்பாக மண்டேலா திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்களிடையே யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் திரைப்படங்களின் மீது பெரும் கவனம் ஏற்பட்டது. அந்த வகையில் பொம்மை நாயகி மற்றும் யானை முகத்தான் ஆகிய திரைப்படங்கள் இந்த 2023 ஆம் ஆண்டில் யோகி பாபு நடிப்பில் வெளிவந்தன. அடுத்ததாக இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் முழுக்க முழுக்க நடுக்கடலில் நடக்கும் கதை களத்தை மையமாகக் கொண்ட போட் எனும் திரைப்படத்தில் தற்போது யோகி பாபு நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்து அட்டகாசமான புதிய திரைப்படத்தில் தற்போது யோகி பாபு நடித்திருக்கிறார். இயக்குனர் ஷாஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு வானவன் என பெயரிடப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அட்டகாசமான ஃபேன்டசி தபடமாக வானவன் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈடன் ஃபிலிக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தாமஸ் ரெனி ஜார்ஜ் தயாரிக்கும் இந்த வானவன் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு உடன் இணைந்து ரமேஷ் திலக், லட்சுமி பிரியா சந்திரமௌலி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 96 திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த வானவன் திரைப்படத்திற்கு கவிஞர் கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதுகிறார். இந்த நிலையில் வானவன் திரைப்படத்தின் டைட்டிலை அறிவிக்கும் ப்ரோமோ வீடியோவை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அசத்தலான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…