2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்தியாவின் முன்னணி மொழிகளில் இந்த படம் வெளியிடப்பட்டது.கே.ஜி.எப் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாரானது,இரண்டாம் பாகம் ரிலீஸை ஒட்டுமொத்த இந்தியாவுமே எதிர்பார்த்திருந்தது.இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.
இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருக்கும் இந்த படத்தின் தமிழ்நாடு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கைப்பற்றியிருந்தனர்.இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி அதீத வரவேற்பை பெற்றிருந்தது.ரசிகர்கள் இந்த படத்தினை திரையரங்குகளில் கொண்டாடி வந்தனர்.
பல முன்னணி நட்சத்திரங்களும் இந்த படத்தினை பாராட்டி வருகின்றனர் 1000 கோடிகளை கடந்து இந்த படம் வசூல் சாதனை படைத்துள்ளது.இந்த படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 100 நாட்களை கடந்துள்ளது.நாடு முழுவதும் இந்த படத்தினை பெரிய ஹிட் ஆக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மாஸான ஒரு வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அத்துடன் இது வெறும் ஆரம்பம் தான் என தெரிவித்துள்ளனர்.எனவே அடுத்தடுத்து கேஜிஎப் 3 உள்ளிட்ட பல மாஸ் படங்களை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.
Celebrating #100MonsterDaysOfKGF2 💥#KGFChapter2 @TheNameIsYash @prashanth_neel @VKiragandur @hombalefilms @HombaleGroup@duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @prabhu_sr #KGF2 #HombaleFilms @excelmovies @AAFilmsIndia @VaaraahiCC @PrithvirajProd pic.twitter.com/gFvTFxk36G
— DreamWarriorPictures (@DreamWarriorpic) July 22, 2022