2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையா
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.இந்த படத்தின் ரிலீஸை ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது,இதற்கு காரணம் கே.ஜி.எப் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பே காரணம்.
இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருபவரும்,பிரபல பாலிவுட் நடிகருமான சஞ்சய் தத் துக்கு லங் கேன்சர் இருப்பது உறுதியாகியுள்ளது.அதிலிருந்து போராடி மீண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இந்த படத்தின் ஷூட்டிங் லாக்டவுனுக்கு பிறகு ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்கியது.இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில்வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.கே.ஜி.எப் படத்தினை ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் வெளியாகி பல சாதனைகளை படைத்து வருகிறது.இந்த படம் ஜூலை 21ஆம் தேதி 2021-ல் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் டப்பிங்கை படத்தின் நாயகன் யாஷ் தொடங்கியுள்ளார் என்று இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Dubbing with rocky is always rocking ✨@TheNameIsYash #KGFChapter2 pic.twitter.com/LYsCgjUMEP
— Prashanth Neel (@prashanth_neel) March 23, 2021