தமிழ் சினிமாவில் வரலாற்று திரைப்படங்கள் காலம் காலமாக வந்து கொண்டு தான் இருக்கிறது, அதில் சில படங்களே தனி எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி தனி அந்தஸ்தை பெறுகிறது. அதன்படி 7 ம் நூற்றாண்டு வரலாற்று புனைவு திரைப்படமாக உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டிருக்கும் திரைப்படம் ‘யாத்திசை’ இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் பிரம்மாண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள யாத்திசை படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி எதிர்பார்ப்பை உருவாக்கியது. புதுமுகங்கள் குழுவாக இணைந்து எடுத்துள்ள முயற்சி தற்போது திரையரங்குகளில் மிகபெரிய வரவேற்பை பெற்று வருகிறது. நிச்சயம் இப்படம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் யாத்திசை படக்குழுவினர்கள் கலந்து கொண்டு படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில் படத்தில் தேவரடியார் கதாபாத்திரங்கள் ஆடையின்றி நகைகளை ஆடையாக நடித்தது அதன் ஆடை வடிவமைப்பு குறித்து பேசியவர்கள்.

“படத்தில் நடிகர்களுக்கு Skin Dress லாம் பயன்படுத்தல.. எல்லாமே நகைகள் வைத்து தான் உடலை மறைத்தோம். கிட்டத்தட்ட அரை நிர்வாணமாதான் கதாபாத்திரங்கள் இருக்கும். மேல ஆடைகள் எதுவும் இல்ல.. கீழ வேட்டி வரும். முழுக்க முழுக்க நகைகள் தான்.

அந்த நகைகள் ஒரே நகையாக வரும் எல்லாமே கையால் செய்யப்பட்டது. ஆடை வடிவமைப்பாளர் சுரேஷ் கோவில் சிற்பங்களை ஆதரமாக வைத்து பண்ணோம். சிற்பங்களில் நகைகள் மட்டும்தான் ஆடையாக இருக்கும். இருந்தாலும் சில இடங்களில் உடல் பாகங்கள் தெரியும்.திரைப்படங்களில் சிலை போல் அப்படியே பண்ண முடியாது. அதனால் வரலாற்றையும் காட்ட வேண்டும் அதேநேரத்தில் திரைப்பட கலையையும் கையாள வேண்டும் என்பதால் சில மாற்றங்கள் செய்துள்ளோம். ஆபாசமா எதுவும் தெரியாது.. அந்த நகை ஆடையை போடும்போது பார்த்து விடுவோம் எங்கெங்கு கொஞ்சம் சேர்க்க வேண்டும் என்பது. படத்திற்கு முன்பே அந்த ஆடையை வைத்தே நிறைய ஒத்திகை பார்த்தோம். அதன்மூலம் அந்த ஆடை மூலம் நிறைய நம்பிக்கை வந்து விட்டது” என்றனர்.

மேலும் படக்குழுவினர் யாத்திசை படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..