கொரோனா வைரஸ்-இன் கோரத்தாண்டவம் இன்னும் முடிந்த பாடில்லை. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரை நாம் அனைவரும் பொதுவாக பேசிக் கொண்டிருக்கும் ஒரு வார்த்தை கொரோனா.
நோய் தொற்று பரவ ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை பரவும் வேகம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது .உலக நாடுகள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் முக கவசம் அணிய வேண்டும் சனிடைசர் பயன்படுத்த வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று எத்தனையோ அறிவிப்புகளும் ஊரடங்கு உத்தரவுகளும் செய்தும் இன்றளவும் எதுவும் பயனளிக்கவில்லை.
எத்தனையோ பரிசோதனைகளும் மருந்துகளும் மருத்துவ வசதிகளும் செயல்பாட்டில் இருந்தும் கொரோனாவின் கோர பசியை நம்மால் இன்னும் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.
இந்தியாவில் கொரோனா தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருகிறது. கொரோனவைரஸ் தீவிர தாக்குதலில் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 12 லட்சத்தை நெருங்கி வருகிறது பாதிக்கப்பட்டவர்களை நிலவரம். இதில் பலியானோரின் எண்ணிக்கை 14046.
அதிலும் நாட்கள் செல்ல செல்ல நாம் தொலைக்காட்சியில் கொரோனா சம்பந்தப்பட்ட செய்திகள் காணும் வேளையில் நிறைய சினிமா பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் குரல் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் செய்திகளை அதிகம் காண்கிறோம்.
நம் மனங்களை கொள்ளை கொண்ட தேன் குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கேவி.ஆனந்த் வசந்த் அன்கோ உரிமையாளரும் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான திரு வசந்த குமார் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் திரு அன்பழகன் அவர்கள் குரோம் நாடுகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் எதிரொலியாக மீண்டும் ஒரு சினிமா பிரபலம் உயிரிழந்துள்ளார். தயாரிப்பாளர் திரு.முத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். பிரேம் பிக்சர்ஸ் சார்பாக 2017 ஆம் ஆண்டு நடிகர் கிருஷ்ணாவின் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தயாரித்த திரைப்படம் யாக்கை . இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு.முத்து கடந்த சில நாட்களாக குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இன்று மாலை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று உயிர்பலி என்று எத்தனை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோ அதற்கு இணையான பாதிப்பை மக்களின் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட முழு ஊரடங்கு காரணமாக சிறு குறு தொழில்கள் செய்யும் மக்களின் வாழ்வாதாரம் சிதைந்துள்ளது. சிறிய பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் செல்வோர் 50% மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று வந்த அறிக்கையின் காரணமாக பலர் வேலை இழந்துள்ளனர்.
ஒவ்வொரு நாடும் மருத்துவ ரீதியில் இந்த குருநாத் தோல்வியில் இருந்து மீண்டு வர எவ்வளவு முன்னேற வேண்டி இருக்கிறதோ அதே அளவு பொருளாதாரத்திலும் மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இரண்டாம் அலை வீசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கொரோனா வைரஸ்-ஐ கட்டுப்படுத்தும் விதமாக உலகமெங்கும் தடுப்பூசிகள் இறக்கப்படுகின்றன .வெகு விரைவில் இந்த கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இனி கொரோனா இல்லை எனும் செய்தியையும் நாம் கேட்போம் என நம்புவோம்.