இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் போலிஸ் கதைகளத்தில் அட்டகாசமான இரண்டு பாகங்களாக உருவான திரைப்படம் ‘விடுதலை’. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஒரே பாகமாக எடுக்கபட வேண்டிய விடுதலை படம் கதையின் சுவாரஸ்யத்தை கூட்ட இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டது. நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிற வைத்து கொண்டிருக்கும் விடுதலை படம் குறித்து அப்படத்தின் மையக் கரு எழுத்தளார் ஜெயமோகன் அவர்கள் நமது கலட்டா வாய்ஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் வெற்றிமாறன் துணைவன் கதையை மாற்றி அமைத்து படமாக்கி வருகிறார் என்ற விமர்சன்த்தையடுத்து அவரிடம் கேள்வியாக கேட்கப்பட்டது.

அதற்கு அவர்,

“துணைவன் ஜெயமோகன் கதை.. விடுதலை கதை வெற்றிமாறனுடையது.. என்னுடைய கதையை எடுத்து படமாக்குவதற்கான உரிமையை அவர் பணம் கொடுத்து வாங்கிருக்கார் அவ்ளோதான். அந்த படத்துக்கு எனக்கும் உள்ள உறவு.. அப்பறம், நீங்க வந்து சின்ன சிறுகதையை எப்படி சினிமாவ எடுப்பீங்க.. அவ்ளோ பெரிய நாவல் சினிமாவ எடுக்க முடியுது ல.. அது இரண்டும் சாத்தியம் தான். அதே மாதிரி கல்கி எழுதுன நாவல் ல ஜெயமோகன் காட்சி சேர்த்து எழுதிருக்கேன்ல.. அப்ப ஜெயமோகன் எழுதிய கதையில ஏன் வெற்றிமாறன் சேர்க்கக்கூடாது.

விடுதலை அவருடைய படம். துணைவன் ன்றது வேற.. துணைவன் கதையை கதையா படிங்க.. வெற்றி மாறன் எங்கிட்ட Discuss பண்ணல.. அவர் அந்த மாதிரி ஆள் கிடையாது. அவருடைய பழக்கம் சிறு வரியை வைத்து கொண்டு கதையை மெருகேற்றி வருபவர். வெர்னர் ஹெர்ஷாக் மாதிரியான இயக்குனர்கள் Script ன்னது அவர்களுக்கு எதிரானது. அங்க ஒரு கதையை மெருகேற்றி மேலேற்றிவார்கள். இந்த படத்தை விஜய் சேதுபதி பெருசாக்கிட்டாரு. அவர் இல்லன்னா இந்த படம் ஒரு பாகத்தோட முடிஞ்சிருக்கும்.. அவர் நல்லா நடிக்க போய்தான் படம் பெருசாகிடுச்சு.. விஜய் சேதுபதி கண்ணுல ஒரு கதாபாத்திரம் கிடைத்து விட்டது அதை மெருகேற்றி விட்டார் வெற்றிமாறன். " என்றார் ஜெயமோகன்

மேலும் பிரபல எழுத்தாளரும் திரைக்கதையாசிரியருமான ஜெயமோகன் அவர்கள் விடுதலை படம் குறித்து பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..