அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் மாஸ் ஹீரோவாக அசத்தி வரும் அஜித்குமாரின் அடுத்த ஆக்சன் பிளாக் திரைப்படமாக வருகிறது துணிவு திரைப்படம். சதுரங்க வேட்டை & தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் மேற்கொண்ட பார்வை & வலிமை படங்களை தொடர்ந்து 3வது முறையாக துணிவு திரைப்படத்தில் அஜித் குமார் நடித்துள்ளார்.
போனி கபூர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்கத்தில் கல்யாண் மாஸ்டர் நடன இயக்கம் செய்துள்ள துணிவு திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற பொங்கல் வெளியீடாக ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் வைரல் ஹிட்டடித்துள்ளன. இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில், துணிவு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் விஸ்வநாத் உத்தப்பா கலந்துகொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், ஒரு மனிதன் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்பதை அஜித்குமார் அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசுகையில்,
“நான் அவரிடம் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதில் VERY GREAT என அவரைப் பற்றி சொல்லும் ஒரு விஷயம் என்னவென்றால், நானே அவரிடம் கேட்டேன் சார் நான் விமானத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். அங்கே நமக்கு ஒரு பெரிய பிரச்சனை என்னவென்று உங்களுக்கு தெரியுமா? விமானத்தில் நமக்கு ஒரு பெரிய பிரச்சனை என்றால் அது என்ன என்று உங்களுக்கு தெரியுமா? என கேட்டேன். அவர் மிகச் சரியாக சொன்னார். இத்தனைக்கும் அவர் 18 ஆண்டுகள் ஏர் லைனில் இல்லை. ஆனால் அவர் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார் பாருங்கள். “விஷ்வா நான் நிச்சயமாக சொல்கிறேன் கழிவறைகள் சுத்தமாக இருக்காது.” அதுதான் உண்மை எந்த விமானத்திலும் கழிவறைகள் சுத்தமாக இருக்காது. அந்த கழிவறைக்குள் சென்றால் அதை சுத்தமாக வைக்க வேண்டும் என்று உங்களுக்கு தோணாது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்றால், “நான் ஒரு கழிவறையை பயன்படுத்தினால் அதற்கு முன்பு எப்படி இருந்ததோ அதேபோல் சுத்தமாக வைத்து விட்டு வருவேன்” இது ஒரு குடிமை உணர்வு ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்றபடி இருப்பார். இப்படி இருப்பவர்களை லெஜெண்ட் என்று சொல்வார்கள்…” என விஸ்வநாத் உத்தப்பா தெரிவித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…