தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நாயகராக பல கோடி ரசிகர்களை தனக்கே உரித்தான ஸ்டைலான நடிப்பால் கவர்ந்து வரும் அஜித் குமாரின் நடிப்பில் கடைசியாக வந்த வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து வரும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் முதல்முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் அஜித் குமார் நடிக்க இருக்கிறார்.

முன்னதாக மேற்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வரிசையில் மூன்றாவது முறையாக அஜித் குமார் - போனி கபூர் - H.வினோத் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் துணிவு. அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் துணிவு படத்தில் சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்ற கல்யாண் மாஸ்டர் நடன இயக்கம் செய்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ள, துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அஜித் குமாருடன் இணைந்து பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், விஸ்வநாத் உத்தப்பா, பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் துணிவு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் விஸ்வநாத் உத்தப்பா நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் துணிவு திரைப்படம் குறித்தும், நடிகர் அஜித்குமார் உடன் இணைந்து பணியாற்றியது குறித்தும், பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் “H.வினோத் சார் எந்த அளவுக்கு PERFECTIONIST என்றால் உதாரணத்திற்கு, ஒரு காட்சியில் 400 பேர் இருப்பார்கள் அத்தனை கமாண்டோஸ் இருப்பார்கள் H.வினோத் சார் ஒரு PERFECTIONIST! சமுத்திரகனி சாரும் நானும் நடித்திருந்தோம் ஒரு மானிட்டரில் பார்க்கிறோம். சரியாக செய்திருந்தோம் நன்றாக வந்திருந்தது. ஆனால் H.வினோத் சார் இல்லை கட்.. ரீ டேக் செய்ய வேண்டும் என்கிறார். எதுக்கு என்று பார்த்தால் அவர் அந்த மானிட்டரில் குறிப்பிட்டு காட்டுகிறார், எங்களுக்குப் பின்னால் எங்கோ ஒரு துணை நடிகர் 40 மீட்டர் தொலைவில் துப்பாக்கியை தவறான திசையில் பிடித்திருக்கிறார். எனவே இந்த காட்சியை மீண்டும் எடுக்க வேண்டும் என துப்பாக்கி சரியான திசையில் பிடிக்க சொல்லி எடுத்தார். அந்த அளவுக்கு அவர் ஒரு PERFECTIONIST..!” என நடிகர் விஸ்வநாத் உத்தப்பா தெரிவித்துள்ளார். மேலும் பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்ட விஸ்வநாத் உத்தப்பாவின் முழு பேட்டி இதோ…