ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி 11-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. மேலும் இந்த முறை பொங்கல் வெளியீடாக நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் குமாரின் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகும் அதே சமயத்தில் தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் இன்னும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்த துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், துணிவு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் விஸ்வநாத் உத்தப்பா நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இயக்குனர் H.வினோத் அவர்கள் குறித்தும் நடிகர் அஜித்குமார் அவர்கள் குறித்தும் துணிவு திரைப்படம் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் இயக்குனர் H.வினோத் ஒரு PERFECTIONIST என சொன்னீர்கள் அவர் கோபப்பட்டு நீங்கள் பார்த்ததுண்டா செட்டில் கோபத்தில் கத்துவது அந்த மாதிரி..? என கேட்டபோது,
ரொம்ப சாதாரணம்… நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் நான் H.வினோத் சாருடன் படப்பிடிப்பில் 22-23நாட்கள் இருந்திருக்கிறேன். மேலும் டப்பிங்கில் 10 நாட்கள் இருந்திருக்கிறேன். அவரைப் பொறுத்தவரை துணிவு திரைப்படம் அவருடைய குழந்தை மாதிரி அந்தக் குழந்தையின் தலையில் நாம் தட்டினால் சும்மா விடுவாரா? இதெல்லாம் சாதாரணம். அந்தக் குழந்தையை எப்படி ட்ரீட் பண்ண வேண்டும் என நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு காட்சி இல்லாத போதும் அவர் எவ்வாறு இயக்குனராக பணியாற்றுகிறார் என்பதை பார்த்து புரிந்து கொள்கிறேன். அவர் எப்படி அந்த குழந்தையை ட்ரீட் செய்கிறாரோ அதேபோல் நாமும் செய்துவிட வேண்டும். நான் தவறாக செய்தால் கோபம் வரும்.. சரி ஒரு தடவை செய்யலாம் இரண்டு தடவை செய்யலாம் தொடர்ந்து தவறு நடந்து கொண்டே இருந்தால் யாராக இருந்தாலும் கோபப்பட தான் செய்வார்கள். யாருமே தேவை இல்லாமல் கத்த மாட்டார்கள். நீங்கள் எப்போது உங்களுடைய 100 சதவீதத்தை கொடுக்க வில்லையோ அப்போது கோபப்படுவார்கள். அப்படி கோபம் வந்தாலும் அவர் கீழே பார்த்தபடியே இதை மீண்டும் பண்ணலாம் என சொல்வார். நேற்றுக் கூட அவரைப் பார்த்தேன் அவ்வளவு முனைப்போடு இருக்கிறார். அவருடைய முழு முனைப்பும் தற்போது துணிவு மட்டும்தான். தன்னுடைய குழந்தை போல அதை பார்த்துக் கொள்கிறார்.” என நடிகர் விஸ்வநாத் உத்தப்பா தெரிவித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…