தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஷ்ணு விஷால், கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்குனராக களம் இறங்கிய வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளிவந்த குள்ளநரி கூட்டம், நீர்பறவை உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனை அடுத்து இயக்குனர் ராம்குமார் இயக்குனராக களமிறங்கிய முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால் முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மிகப் பிரபலமான ஹீரோவாக உயர்ந்தார். தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் படமாக விஷ்ணு விஷால் நடித்த ஜீவா இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படமாக வெளிவந்த இன்று நேற்று நாளை, இயக்குனர் எழில் இயக்கத்தில் காமெடி கலாட்டாவாக வந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய திரைப்படங்களும் பெரும் கவனம் ஈர்த்தன.
தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைந்த ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான ராட்சசன் திரைப்படம் தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக ஒட்டுமொத்த ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது. இதனை அடுத்து கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டில் விஷ்ணு விஷால் நடிப்பில் பக்க ஆக்சன் திரில்லர் படமாக வெளிவந்த FIR சூப்பர் ஹிட்டாக, அடுத்து விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளிவந்த கட்டா குஸ்தி திரைப்படமும் பெரும் வெற்றி பெற்றது. முன்னதாக விஷ்ணு விஷால் நடிப்பில் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் மோகன்தாஸ் திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில், கிரைம் த்ரில்லர் திரைப்படமாக தயாராகும் ஆர்யன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். அடுத்ததாக லால் சலாம் படத்திலும் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்திய திரைப்படமாக தயாராகும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 34 நாட்கள் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த நிலையில் முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணி புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளது. நடிகர் விஷ்ணு விஷாலின் திரை பயணத்தில் 21வது திரைப்படமாக தயாராகும் இந்த புதிய திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு VV21 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இப்படத்திற்கான லுக் டெஸ்ட்க்காக செல்வதாக குறிப்பிட்டு நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனவே இதர அறிவிப்புகள் வெகு விரைவில் வரும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.