தமிழ் சினிமாவிலிருந்து அடுத்ததாக உருவாகவுள்ள பெரிய திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. புரட்சி தளபதி விஷால் தயாரித்து நடிக்கும் இப்படம் மிக பிரமாண்ட அளவில் உருவாகி வருகிறது. ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ‘மற்றும் ‘பகீரா’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் சுனில், இயக்குனர் செல்வராகவன், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்
மினி ஸ்டுடியோ வினோத்குமார் தயாரிப்பில் 60களின் கதை களத்தை மையமாக கொண்ட கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார் மற்றும் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கிறார்.
அட்டகாசமான முதல் பார்வையிலிர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் அளவு அடுத்தடுத்த அப்டேட்டுகளை தொடர்ந்து கொடுத்து வரும் மார்க் ஆண்டனி படக்குழுவினர் அடுத்ததாக மற்றுமொரு அப்டேட்டுகளை கொடுத்துள்ளனர். முன்னதாக படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா மற்றும் குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை சிறுவயதில் இருப்பது போல் எடிட் செய்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதனுடன் மார்க் ஆண்டனி படத்தின் மோஷன் போஸ்டர் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்ததற்கு நன்றி என்று தெரிவித்து அதனுடன் டைம் டிராவல் குறித்த அறிவிப்பையும் தெரிவித்துள்ளார். முன்னதாக எஸ் ஜே சூர்யா லோக்கல் Sci fi திரைப்படம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Here we go Mark Antony 1st look motion poster local Sci-Fi https://t.co/gvqoGIJkJd @gvprakash music therikkudhu bro
— S J Suryah (@iam_SJSuryah) March 8, 2023
அதன்படி மார்க் ஆண்டனி திரைப்படம் டைம் டிராவல் சார்ந்த திரைக்கதையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் 60 காலக் கட்டத்தில் படமாக்கும் காட்சியையும் முதல்பார்வையை மட்டுமே இதுவரை படக்குழு வெளியிட்டுள்ளது. எந்த வகையிலான டைம் டிராவல் படமாக இந்த படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் Sci fi திரைப்படங்கள் பல வந்தாலும் அதில் சில படங்கள் தான் வெற்றி பெறுகிறது, குறிப்பாக டைம் டிராவல் செய்யும் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். முன்னதாக ரவி சங்கர் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் மற்றும் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று வேடங்களில் அசத்தியிருக்கு ‘24’ திரைப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களில் வரிசையில் மார்க் ஆண்டனி படமும் மக்களிடம் கவனம் பெறுமா என்பது வெளியீட்டுக்கு பின்னரே தெரியவரும்.