எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன்.இவர் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இவர்களுடன் நரைன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம்,காயத்ரி,பிக்பாஸ் ஷிவானி,மைனா,மஹேஸ்வரி VJ,ஸ்வாதிஷ்டா,ஸ்ரீகுமார்கணேஷ் என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.ஏற்கனவே கமல்,விஜய்சேதுபதி,பஹத் என பெரும் நடிகர்கள் இருக்கையில் சூர்யாவும் இந்த படத்தில் இணைந்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றியடைந்துள்ளது விக்ரம் படம்.
இந்த படத்தில் Rolex என்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்து அடுத்தடுத்த படங்களுக்கு சூர்யா வழிவகுத்துள்ளார்.படம் பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் குழுவிற்கு கார்,பைக் உள்ளிட்டவற்றை பரிசளித்தார்.
இதனை தொடர்ந்து படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்திய சூர்யாவை நேரில் சந்தித்து அவருக்கு ஒரு Rolex வாட்ச்சை பரிசளித்து கௌரவித்துள்ளார்.இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
A moment like this makes life beautiful! Thank you Anna for your #Rolex! @ikamalhaasan pic.twitter.com/uAfAM8bVkM
— Suriya Sivakumar (@Suriya_offl) June 8, 2022