விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.
சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று ஈரமான ரோஜாவே.கடந்த 2018-ல் தொடங்கப்பட்ட இந்த தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.பவித்ரா ஜனனி இந்த தொடரின் முன்னணி நாயகியாகவும்,திரவியம் முன்னணி நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.
ஷியாம்,காயத்ரி புவனேஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் தற்போது 800 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.பல திருப்பங்களுடன் சென்று வந்த இந்த தொடர் இன்றுடன் நிறைவுக்கு வந்தது.இத்தனை நாட்களாக தங்களுக்கு ஆதரவு தந்துவந்த ரசிகர்களுக்கு சீரியல் குழுவினர் நன்றிகளை வீடியோவாக தெரிவித்துள்ளனர்.