தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.இவரது பிகில் படம் கடந்த 2019 தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.பொங்கலை முன்னிட்டு இந்த படம் இன்று மிக பிரம்மாண்டமாக கொரோனவை அடுத்து முதல் பெரிய படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..

இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக கமிட் ஆகியுள்ளதாக நண்பன் உள்ளிட்ட படங்களில் வேலை பார்த்த மனோஜ் பரமஹம்சா தெரிவித்துள்ளார்.

Excited to start yet another journey with this wonderful human being loved by the entrie state and very soon by the entire nation !.... looking forward to work from where we left #nanban kindleing the memory lane #thlapathy65 going to be an pan india affair ! Get ready folks ... pic.twitter.com/QLoDNPovio

— manoj paramahamsa (@manojdft) February 25, 2021