விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 3-வது வாரத்தில் மிகவும் பரபரப்பாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த வார கேப்டனாக சிபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அபிஷேக், பாவனி, பிரியங்கா, ஐக்கி பெர்ரி, இசைவாணி, சின்னபொண்ணு, அபினய், அக்ஷரா மற்றும் தாமரை செல்வி ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர்.
தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5 முதல் லக்சரி பட்ஜெட் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றி பெறும் போட்டியாளர் இந்த வார எலிமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதிலிருந்து தன்னை காப்பாற்றி கொள்ள முடியும். அப்படி எலிமினேஷனுக்கு தேர்வாகாத போட்டியாளர் வெற்றி பெற்றால் அவர் அவருக்கு வேண்டிய ஒருவரை காப்பாற்ற முடியும்.
எனவே கடந்த 2 நாட்களாக இரவு பகலாக இந்த டாஸ்க் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நாணயத்தை ஒருவர் கைப்பற்றுவதும் அவரிடமிருந்து மற்றொருவர் திருடுவதும் என நகரும் இந்த டாஸ்க்கில் நேற்று நாணயத்தை எடுக்கும்பொழுது மாட்டிக்கொண்ட நிரூப், பிரியங்கா மற்றும் சுருதி பாதாள சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்றைய (அக்டோபர் 21) நிகழ்ச்சியில் தொடர்ந்து லக்சரி பட்ஜெட் டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில் பாவனி,வருண் மற்றும் சுருதி ஆகியோரிடம் அபிஷேக் ராஜா மாற்றி மாற்றி பேசி கொளுத்திப்போடும் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ இதோ....