தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் சிறந்த கதையம்சம் உள்ள திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து ரசிகர்களை மகிழ்விக்கும் வகையியில் விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல், இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் என வரிசையாக விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

தொடர்ந்து பாலிவுட்டில் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் இயக்கத்தில் புதிய வெப்சீரிஸ்-ல் நடித்துள்ள விஜய் சேதுபதி, நடிகை அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காந்தி டாக்ஸ் எனும் மௌன திரைப்படத்திலும் , மலையாளத்தில் 19(1)(a) எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனிடையே முன்னதாக காக்காமுட்டை & ஆண்டவன் கட்டளை படங்களின் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் கடைசி விவசாயி.

நல்லாண்டி & விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கடைசி விவசாயி படத்தை ட்ரைபல் ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் ஹார்வி இணைந்து இசை அமைத்துள்ள கடைசி விவசாயி படத்தை இயக்குனர் மணிகண்டன் ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன கடைசி விவசாயி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் கடைசி விவசாயி திரைப்படத்திலிருந்து புதிய SNEAK PEEK வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோ இதோ...