மக்களின் மனங்கவர்ந்த நடிகராக உயர்ந்துள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று ஏப்ரல் 28-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதியும், இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் வருகிற ஜூன் 24-ம் தேதியும் ரிலீஸாகவுள்ளது.
தொடர்ந்து நடிகை கத்ரீனா கைப் உடன் இணைந்து அந்தாதுன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் மேரி கிறிஸ்மஸ் திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் ஹிந்தியில் புதிய வெப் சீரிஸில் நடித்துள்ளார். முன்னணி பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த வெப் சீரிஸில் ராசி கண்ணா மற்றும் கே கே மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
காவல் துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த வெப்சீரிஸுக்கு ஃபர்ஸி என பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீசாக உள்ள ஃபர்ஸி வெப்சீரிஸ் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. ஃபர்ஸி வெப்சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் இதோ…
#FarziOnPrime: An artist who gets pulled into the murky high stakes of a con job and a fiery task force officer on the mission to rid the country of his menaces in a fast-paced, edgy one-of-a-kind thriller. #PrimeVideoPresentsIndia #SeeWhereItTakesYou pic.twitter.com/5mNMzXI6gq
— amazon prime video IN (@PrimeVideoIN) April 28, 2022