இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் பாடல் குறித்த முக்கிய அறிவிப்பை பிரபல பாடலாசிரியர் பகிர்ந்து கொண்டார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் கூட்டணியின் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கும் நிலையில், அடுத்ததாக தனது 68வது படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் தற்போது விஜய் முழு கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பக்கா என்டர்டைனிங் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறை தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 2ம் தேதி பூஜை உடன் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தளபதி விஜய் உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, ஜெயராம், மோகன், யோகி பாபு, அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் உடன் பிரேம்ஜி அமரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுணி தளபதி 68 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வெங்கட்ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். ராஜீவன் அவர்களின் கலை இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இந்த தளபதி 68 திரைப்படத்திற்கு திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார்.
இதனிடையே தளபதி 68 திரைப்படத்தின் பாடல் குறித்த ருசிகர தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது. முன்னதாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்காக வெளிவந்த நண்பன் படத்தின் "அஸ்கலஸ்கா", இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தின் "கூகுள் கூகுள்" மற்றும் கத்தி படத்தின் "செல்பி புள்ள" என தளபதி விஜயின் ட்ரெண்டிங் ஹிட்டடித்த பாடல்களை எழுதிய பாடலாசிரியர் மதன் கார்க்கி அவர்கள் தற்போது தளபதி 62 திரைப்படத்தில் மீண்டும் தளபதி விஜய்காக அட்டகாசமான பாடல் எழுதி இருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் பாடலாசிரியர் மதன் கார்த்தி அவர்கள், “தளபதி 68 திரைப்படத்தின் ஒரு அங்கமாய் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. அஸ்கலஸ்கா, கூகுள் கூகுள் மற்றும் செல்பி புள்ள பாடல்களுக்கு பிறகு மீண்டும் தளபதி விஜயின் பாடலுக்கு பணியாற்றியது மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பாடலுக்கான வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி வெங்கட் பிரபு & யுவன் சங்கர் ராஜா” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கியின் இந்த பதிவால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து இருக்கின்றனர். மேலும் ஏற்கனவே தளபதி விஜய் அவர்களுக்கு மதன் கார்த்தி எழுதிய அந்த மூன்று பாடல்களையும் பாடியதும் தளபதி விஜய் தான் என்பதால் இந்த தளபதி 68 படத்தில் தற்போது மதன் கார்த்தி அவர்கள் எழுதியிருக்கும் இந்த பாடலையும் தளபதி விஜய் அவர்கள் பாடியிருப்பாரா என்றும் தற்போது எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்புகளுக்கான பதில் வெகு விரைவில் வெளிவரும் என தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பாடலாசிரியர் மதன் கார்த்தி அவர்களின் அந்த பதிவு இதோ…