தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் அட்டகாசமான காதல் திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘குஷி’. கொரோனா காலத்திற்கு முன்பே இப்படம் தொடங்கப்பட்டு பின் சில சிக்கல்களால் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது. பின் நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்திற்கான இறுதிகட்ட வேளைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர் படக்குழு.
குஷி படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. காரணம் விஜய் தேவரகொண்டா முழு காதல் திரைப்படத்தில் நடித்து நீண்ட காலம் ஆகின்றது. அதே நேரத்தில் சமந்தாவிற்கும் முழு நீள காதல் திரைப்படம் இதுவரை கைகூடமால் இருந்து வருகிறது. இருவரும் காதல் திரைப்படங்களுக்கே பேர் போனவர்கள். அப்படி இருக்கையில் இந்த இருவரது கூட்டணியில் ஒரு படம் என்றால் அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பு உள்ளது. விஜய் தேவரகொண்டா சமந்தா இருவரது இதற்கு முன்னதாக ‘மகாநதி’ திரைப்படத்தில் ஒன்றாக நடிதுள்ளனர். இது இந்த ஜோடியின் இரண்டாவது படமாக அமைந்துள்ளது என்பது குரிப்பிடதக்கது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தினை சிவா நிர்வாணா இயக்குகிறார். படத்திற்கு ஒளிப்பதிவாளர் முரளி ஒளிப்பதிவு செய்ய பிரவின் புடி படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள முதல் பாடல்’நா ரோஜா நூவே’ விஜய் தேவரகொண்டா பிறந்தாநாளை முன்னிட்டு முன்னதாக வெளியானது. இதுவரை 9 மில்லியன் பார்வையாளர்களை இப்பாடல் பெற்று தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தனி எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா ‘நா ரோஜா நூவே’ பாடல் படப்பிடிப்பு மற்றும் படத்தின் காட்சி படப்பிடிப்பில் சமந்தாவிற்கு தெரியாமல் குறும்பு தனமாக எடுக்கப்பட்ட வீடியோக்களை சிறப்பு தொகுப்பாக தயார் செய்து அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் வீடியோவில் நா ரோஜா நூவே பாடலையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அந்த வீடியோவில் இருவரது நட்பை பார்த்து உற்சாகத்தில் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். மேலும் விஜய் தேவரகொண்டா குஷி படத்தையடுத்து இயக்குனர் கௌதம் தின்னானூரி இயக்கும் ‘VD12’ படத்திலும் நடித்து வருகிறார். சமந்தா இந்தி இணைய தொடரான ‘சிட்டாடல்’ நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.