அர்ஜுன் ரெட்டி திரைப்படத்திற்குப் பிறகு இந்திய அளவில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்துள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகர் ஆகவும் இந்திய சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோவாகவும் திகழ்கிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் ஆனது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக நடிகர் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்த போக்கிரி மற்றும் பிசினஸ்மேன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் லைகர் எனும் அதிரடி ஆக்சன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா.
குத்து சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் படத்தில், கதாநாயகியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடிக்க , ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, லைகர் திரைப்படத்தின் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் நடிக்கிறார்.
தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் தயாராகி, இந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரிலீசாகவுள்ள லைகர் திரைப்படத்தை நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க,யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
விஷ்ணு சர்மா ஒளிப்பதிவில் லைகர் திரைப்படத்தின் பாடல்களுக்கு தனிஷ்க் பக்ச்சி இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்க்கிறார். முன்னதாக வெளிவந்த லைகர் படத்தின் ஃபர்ஸ்ட் GLIMPSE வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் லைகர் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Last leg of #LIGER schedule 🙌 pic.twitter.com/S4ud4AGX4M
— Charmme Kaur (@Charmmeofficial) February 4, 2022