தென்னிந்தியாவின் இளம் நடிகரான விஜய் தேவாரகொண்டா தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல துறை ரசிகர்களை கவர்ந்தவர். துள்ளலான நடிப்பை வெளிபடுத்தி தெலுங்கு திரையுலகில் முன்னணியில் வலம் வரும் விஜய் தேவரகொண்டா தற்போது சமந்தாவுடன் ‘குஷி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. அதை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா இயக்குனர் கௌதம் தின்னானூரி இயக்கத்தில் ‘VD12’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த பிறந்த நாளை மேலும் சுவாரஸ்யம் கூட்டும் விதமாக புது நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார். ஆண்டு தோறும் ஒவ்வொரு பிறந்த நாளும் வித்யாசமான முறையில் தனது ரசிகர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அதன்படி கடந்த ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டா தன் ரசிகர்கள் 100 பேரை மணாலி பகுதிக்கு சுற்றுலா அழைத்து சென்றார். இந்த நிகழ்வு பல தரப்பினரிடம் இருந்து பாராட்டுகளை அவருக்கு கொடுத்தது. அதை போல் இந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா வித்யாசமாக ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்.
தேவரகொண்டா பிறந்த நாள் டிரக் என்ற பெயரில் இலவச ஐஸ்க்ரீம் வண்டியை ஏற்பாடு செய்து அதனை முக்கிய நகரங்களான ஹைதராபாத், விசாகபட்டினம், சென்னை, பெங்களூர், மும்பை, புனே பகுதிகளில் உலாவர செய்துள்ளார். இந்த வண்டியை ரசிகர்கள் நகரங்களில் பார்த்தால் இலவசமாக ஐஸ்க்ரீம் பெற்றுக் கொள்ளலாம் என்று விஜய் தேவரகொண்டா அறிவித்துள்ளார். வித்யாசமான பிறந்தநாள் பரிசை தன் ரசிகர்களுக்கு இந்த வருடமும் கொடுத்துள்ளார். இதையடுத்து விஜய் தேவரகொண்டா அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் நகரங்களில் சுற்றும் ஐஸ்க்ரீம் டிரக்குளை ரசிகர்கள் கண்டறிந்து ஐஸ்க்ரீம் பெற்று பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக அவரது பிறந்தநாளையொட்டி குஷி படத்தின் பாடல் வெளியிட்டு பிறந்தநாளுக்கு மேலும் ஒரு சிறப்பு பரிசு கொடுத்தார் விஜய் தேவரகொண்டா என்பது குறிப்பிடத்தக்கது.
#VijayDeverakonda Distributing Ice Cream to Fans on the Eve of his Birthday at Creamstone, Kondapur in Hyderabad.
— Vijay Deverakonda🌟 (@TheVDKFC) May 8, 2023
On Occasion of Our Rowdy Boy The Vijay Deverakonda B-day "Devarakonda Birthday Trucks" will go across 8 Cities in India distributing ice creams pic.twitter.com/fr7dnMLsHK