தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளராக பல ட்ரெண்ட் செட்டிங் பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி “நான்” திரைப்படத்திலிருந்து கதாநாயகராக அறிமுகமாகி, தொடர்ந்து நடிகராக வரிசையாக பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். இதனிடையே இயக்குனராகவும் அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை மே 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடன் WIDE ANGLE நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி பல சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், பிச்சைக்காரன் 2 படத்தின் அறிவிப்பு வெளிவந்த சமயங்களில் இருந்து பரவலாக பேசப்படும் பிக்கிலி மற்றும் ஆன்டி பிக்கிலி என்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் குறித்து விவரித்திருந்தார். அப்படி பேசுகையில்,

“பிக்கிலி என்பவர்கள் யார் என்றால் பணம் இருக்கு என்பதால் இன்னொருவனை கேவலமாக நினைப்பது இன்னொருவனிடமிருந்து என்ன வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என இருப்பது. உண்மையில் பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அன்பை தவிர்த்து பணத்தை வைத்து என்ன அநியாயங்கள் வேண்டுமானாலும் செய்யலாம் செய்துவிட்டு எளிதாக தப்பித்து சென்றுவிடலாம் யாரும் நம்மை கேட்க முடியாது. பணம் இருக்கிறது என்பதாலேயே யாரும் அவர்களை நெருங்க மாட்டார்கள். பணம் இருக்கிறது என்பதால் எவ்வளவு பெரிய மகா குற்றங்களை வேண்டுமானாலும் செய்யலாம் அதை மிக எளிதாக மற்றவர்களின் மீது ஏவி தன்னுடைய சக்தி என்ன என்பதை காட்டலாம் அந்த திமிரில் வாழ்வது அவர்களுக்கு பெயர் பிக்கிலி என வைக்க வேண்டும் என வைத்தேன். அவர்களை எதிர்ப்பவன் ஆன்டி பிக்கிலி!" என்றும் தெரிவித்தார்.

அப்படியானால் இந்த படத்திற்கு பிக்கிலி என்றே பெயர் வைத்திருக்கலாமே… SEQUELஆக இல்லாத போது, பிச்சைக்காரன் 2 என்ற டைட்டில் ஏன்? என கேட்டபோது, “இது SEQUEL கிடையாது. ஒரு விஷயத்தை நாம் எதற்காக செய்கிறோம், மக்களுக்கு போய் சென்றடைய வேண்டும் என்று தானே முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. ஒரு ஓபனிங் பெரிதாக இருக்க வேண்டும். நிறைய பேர் பார்க்க வேண்டும் என்பதுதான் நம்முடைய எண்ணமாக இருக்கும் அல்லவா? உண்மையில் படத்தில் இந்தியாவில் ஏழாவது பணக்காரன் தான் படத்துடைய ஹீரோ. அவன் ஒரு பிச்சைக்காரன்! அது ஏன்? அவன் பிச்சைக்காரனாக இருப்பதால் அந்த டைட்டிலும் சரிதான். இல்லை என சொல்ல முடியாது. ஒரு சப் டைட்டில் மாதிரி. இப்போது பார்த்தீர்கள் என்றால் பிச்சைக்காரன் என டைட்டில் போட்டு கீழே ஆன்டி பிக்கிலி என போடும்போது, வெறும் பிச்சைக்காரனை கவனிப்பதை விட அது என்ன ஆன்டி பிக்கிலி என்பது மக்களுக்கு ஒரு ஆர்வத்தை அதிகமாகக்கும். அதனால் இரண்டையும் சேர்த்து போடலாமே... என யோசித்து வைத்தது தான்” என பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட விஜய் ஆண்டனியின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.