தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் தளபதி விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் இருவரின் படங்களும் ரிலீஸ் ஆகும் சமயத்தில் திரையரங்குகள் தீபாவளி கொண்டாடும். அந்தவகையில் கடைசியாக அஜித் குமார் காவல்துறை அதிகாரியாக நடித்து வெளிவந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படமான வலிமை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதனையடுத்து அஜித்குமார் நடிக்கும் #AK61 திரைப்படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பதாக அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்டத்தையும் இயக்குனர் H.வினோத் இயக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அடுத்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்குமாரின் #AK62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.
முன்னதாக மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் அடுத்து ரிலீசாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய் மற்றும் நடிகர் அஜித்குமாரின் திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய கோவிந்தராஜ் காலமானார். தளபதி விஜய் நடித்த “காதலுக்கு மரியாதை”, “பூவே உனக்காக” , அஜித்குமாரின் “நீ வருவாயென” ஆகிய படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய கோவிந்தராஜ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 82. பிரபல ஆடை வடிவமைப்பாளர் கோவிந்தராஜின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
#NEWSUPDATE | விஜய், அஜித் பட ஆடை வடிவமைப்பாளர் காலமானார்!#SunNews | #RIP pic.twitter.com/plNSTJ0hMB
— Sun News (@sunnewstamil) March 24, 2022