தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா மூவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் எஸ்.எஸ்.லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர், இளையதிலகம் , ரெட்டின் கிங்ஸ்லீ மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ரெட்டின் கிங்ஸ்லீயின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் அவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, “அர்னால்ட் எனும் கதாபாத்திரத்தில் எங்களது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த ரெட்டின் கிங்ஸ்லீக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார். ட்ரெண்டாகும் அந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ...

Happy birthday @RedinKingsley 🥳

Plays the character of #Arnold in our film #KaathuVaakulaRenduKaadhal 😇

It always feels nice & happy to work with this little old man 🥳🥳🥳 ! @Rowdy_Pictures @7screenstudio @DoneChannel1 pic.twitter.com/ZzfDi53LUW

— Vignesh Shivan (@VigneshShivN) December 22, 2021