கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸிற்கு எதிராக நமது ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக ஏப்ரல் 5-ம் தேதியான நேற்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரை மின் விளக்குகளை அனைத்து விட்டு, விளக்கு அல்லது டார்ச் லைட் மூலம் ஒளி எழுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது கையால் விளக்கை ஏந்தியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன், அறிவியல் ரீதியாக பேசும்போது, அதிகப்படியான நெருப்பும், ஒளியும் வெப்பநிலையை அதிகப்படுத்தி சில கொரோனா வைரஸை கொன்று விடலாம் எனக்கூறப்படுவது உண்மையா ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

விக்னேஷ் சிவன் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உள்ளது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

So scientifically speaking ... with so much of fire & light the atmospheric temperature would have increased by a few degrees and we would have successfully killed some members of the corona virus 🦠 family ! #IsThatAFact ??? 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🧐🧐🧐🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 #wikkiclicks📷 #nofilter #candles #candlelight #photography #photo #shotoniphone #nayanthara

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on