தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு விஜய் சேதுபதி - நயன்தாரா - சமந்தா மூவரும் இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து தனது அடுத்த படத்தில் முதல் முறையாக அஜித் குமார் உடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைவதாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து சமீபத்தில் AK62 திரைப்படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாகவும் தகவல்கள் வந்தன. அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் இப்படத்தில் கோமாளி மற்றும் லவ் டுடே திரைப்படங்களில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற விக்னேஷ் சிவன் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில், அஜித் குமாரின் துணிவு திரைப்படத்தில் நடித்தவரும் பிரபல நடன கலைஞருமான பிக் பாஸ் அமீரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனோடு உரையாடினார். அப்படி பேசுகையில், நீங்கள் முதன் முதலில் ஒரு படம் இயக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கிறீர்கள் ஒரு பெரிய நட்சத்திரம் நடிகரோடு இணைகிறீர்கள்? உங்களுடைய வயது அந்த சமயத்தில் அந்தப் PRESSUREஐ எப்படி எதிர்கொண்டீர்கள்? என அமீர் கேட்ட போது,
PRESSURE எல்லாம் ஒண்ணுமே இல்லை... ஏனென்றால் நான் இழப்பதற்கு எதுவுமே இல்லை... அந்த சமயத்தில் ஒரு வாய்ப்பு கிடைப்பது என்பதே பெரிய விஷயம் எப்போதுமே கிரிக்கெட்டிலோ அல்லது எந்த ஒரு விஷயத்திலும் எல்லோருமே என்ன சொல்வார்கள் நாம் போகிறோம் ஒரு கேம் விளையாட போகிறோம் என்றால் நீங்கள் உங்களுக்குள் என்ஜாய் செய்ய முயற்சிக்க வேண்டும். எனவே நான் பயங்கரமாக என்ஜாய் செய்ய வேண்டும் என்ற மனநிலையில் தான் இருந்தேன். மிகவும் PRESSURE எல்லாம் நான் எடுத்துக் கொள்ளவில்லை. முதல் படம் செய்யும்போதும் நான் என்னை என்ஜாய் செய்தேன். முதல் முதலில் லண்டனில் ஷூட் பண்ணுகிறோம். அதுக்கு மேல என்ன.. அவ்வளவுதான். அப்படித்தான் அந்த படம் எல்லாம் ஆரம்பித்தது. மேலும் அந்த திரைப்படம் ரொம்ப முன்னாடியே ஆரம்பிக்க வேண்டிய ஒரு படம் பின்னர் ஒரு இரண்டு ஆண்டுகள் கழித்து ஆரம்பித்தது. எனவே நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். என்னுடைய முதல் படமாக வேறு ஒரு படம் இருந்திருக்கலாம். ஆனால் எது முதல் படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அந்த படமே முதல் படமாக நடக்கும் போது மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தேன்.
என இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…