தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். எழுத்தாளார் ஜெயமோகனின் துணைவன் சிருகதையயை தழுவி கிரைம் திரில்லர் பீரியட் படமாக இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்க இவருடன் வாத்தியராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், பவானி பிரகாஷ் குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. மேலும் இசைஞானி இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் தற்போது இணையத்தில் டிரெண்ட்டிங்கில் உள்ளது.
படம் வெளியாக சில நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் விடுதலை முதல் பாகத்தை படத்தின் விநியோகஸ்தர் ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் எம் செண்பகமூர்த்தி படத்தை பார்த்து விட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் படம் பார்த்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில்,
“அற்புதமான அனுபவத்தை வெற்றிமாறனின் விடுதலை படம் கொடுத்தது. நிச்சயம் அனைத்து ரெக்கார்டுகளையும் முறியடிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அந்த பதிவு மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.
இயக்குனர் வெற்றி மாறன் திரைப்படங்கள் வசூல் குவிப்பது மட்டுமல்லாமல் விருதுகளையும் குவிப்பது வாடிக்கை. முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை வென்றது. அதே நேரத்தில் நூறு கோடி வசூல் மார்கேட்டிலும் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.