பொதுவாகவே ஒரு படத்தில் வித்யாசத்தை கொடுப்பதற்கு கலைஞர்கள் நாளுக்கு நாள் வித்யாசத்தை கொடுத்து கொண்டே வருவார்கள். அதன்படி பெருவாரியா கலைஞர்கள் ஒளிப்பதிவில் வித்யாசத்தை கொடுத்து ரசிகர்களை கவர்வார்கள் குறிப்பாக ஒரே சூழலில் அதாவது Single Shot Technic என்று சொல்லப்படும் யுக்தியை கையிலெடுத்து படத்தை மெருகூட்டுகிறார்கள். அதன்படி தமிழில் சிறந்த எடுத்துக் காட்டாய் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் Single shot non-linear film என்ற பெருமையை தக்க வைத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே போல் சமீபத்தில் வெளியான திரைப்படத்தில் Single shot யுக்தியை பயன்படுத்தி கொண்டு பிரம்மிப்பை ஏற்படுத்திய திரைப்படம் விடுதலை.

படத்தின் துவக்க காட்சியான 10 நிமிட காட்சியை வெற்றிமாறன் Single shot முறையில் கொடுத்திருப்பார். படத்தின் கருவை விறுவிறுப்பாக மாற்ற மிகப்பெரிய ரயில் விபத்து காட்சியை உருவாக்கி கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒட்டு மொத்த குழுவே மெனக்கெட்டு அசத்தியிருப்பார்கள். படத்தின் துவக்க காட்சியாக Single shot காட்சி இடம் பெற்றாலும் படம் முடிந்தும் அந்த காட்சியினை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

ஒட்டும்மொத்தமாக மிகப்பெரிய உழைப்பை உட்புகுத்தி பிரமாண்ட உணர்வை தாங்கி வெளியான விடுதலை திரைப்படத்தை உலகமெங்கும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற அந்த Single shot காட்சி படமாகும் நிகழ்வினை சிறப்பு காட்சியாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் அந்த காட்சியினை வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.

RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் வழங்க இரண்டு பாகங்களாக எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை தழுவி உருவானது விடுதலை. படத்தில் சூரி கதையின் நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். இவருடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் வரும் ஒளிப்பதிவாளர் R.வேல்ராஜ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய R.ராமர் படத்தொகுப்பு செய்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்து பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.