தேர்ந்த கதைகளில் நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் பவானி ஸ்ரீ. பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமாரின் சகோதரியான இவர் கடந்த 2020 ஐஸ்வர்யா ராஜேஷ் , விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘க.பெ.ரணசிங்கம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். அதே ஆண்டில் பிரபல ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ் வெளியான ஆந்தாலாஜி தொடரில் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் வெளியான ‘தங்கம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வெகுஜன மக்களின் பாராட்டுகளை பெற்றார். அதன் வரிசையில் தற்போது பவானி ஸ்ரீ இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் பீரியட் கிரைம் திரில்லர் படமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘விடுதலை’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். டிரைலர் மற்றும் படத்தின் சிறு முன்னோட்டத்தின் படி பவானி ஸ்ரீ நடிப்பை ரசிகர்கள் அதிகம் பாராட்டி வருகின்றனர்.

இன்று உலகமெங்கும் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் பவானி ஸ்ரீ நடித்து வெளியாகியுள்ள விடுதலை திரைப்படம் ரசிகர்களினால் ஆரவாரமாக கொண்டாடப் பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை பவானி ஸ்ரீ நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்துகொண்டு விடுதலை படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில் இசைஞானி இளையராஜா விடுதலை படத்தில் இசையமைத்துள்ளார். அவர் இசையில் நடிப்பது குறித்தும் அவருடனான சந்திப்பு குறித்தும் பாவானி ஸ்ரீ பகிர்ந்து கொண்டவை,

"ராஜா சார் எல்லா தரப்பு வயதிலும் அவருக்கு ரசிகர்கள் இருப்பாங்க.. எங்க அப்பாவுக்குலாம் ரொம்ப பிடிக்கும்.. எனக்கு ரொம்ப ஆவலா இருந்தது. அவரோட இசையில நடிக்க வாய்ப்பு கிடைக்கறது எல்லாம் ஆசிர்வாதம் கிடைப்பது போல.. ஒரு தடவ அவர சந்திக்கும் போது 'நீயும் பாடுவியா?' அப்படினு கேட்டார். நான் இல்ல சார் பெருசா கத்துக்கல னு என்றேன். " என்று தெரிவித்தார் பவானி ஸ்ரீ.

மேலும் அதை தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் விடுதலை படத்திற்காக பவானி ஸ்ரீ அவர்களை வாழ்த்தி பகிர்ந்த பதிவினை பவானி ஸ்ரீ பகிர்ந்து “நன்றி மாமா” என்று தெரிவித்திருப்பார்.

இதையடுத்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் கேள்விகளை கேட்டிருந்தனர். இந்த நிகழ்வு குறித்து பவானி ஸ்ரீ அவர்களிடம் கேட்கையில் அவர், "அது ஒரு மரியாதையுடன் பகிர்ந்தேன். அதாவது பயத்தோட கலந்த மரியாதை அது" என்றார்.

மேலும் நடிகை பவானி பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு நேர்காணல் இதோ..