தனக்கே உரித்தான தனி ஸ்டைலில் தொடர்ந்து பக்கா என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் படங்கள் மீது ரசிகர்களுக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் தற்போது முதல் முறை தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் இயக்குனர் வெங்கட்பிரபு தனது திரைப்பயணத்தில் 11வது திரைப்படமாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் VP11 திரைப்படத்தை சில வாரங்களுக்கு முன் தொடங்கினார்.
இத்திரைப்படத்தில் தனது 22வது திரைப்படமாக (NC22) பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் NC22 படத்தில், பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் SR.கதிர் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். NC22 படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைக்கின்றனர். சமீபத்தில் தொடங்கப்பட்ட NC22 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பட குழுவினர் தற்போது புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
NC22 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நாளை நவம்பர் 23ஆம் தேதி காலை 10:18 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள படக்குழுவினர், இதனை அறிவிக்கும் வகையில் அசத்தலான NC22 படத்தின் ப்ரீ லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள NC22 திரைப்படத்தின் ப்ரீ லுக் போஸ்டர் இதோ…